ராஜேஸ்வரி மாளிகை இப்போது டாக்டர் கங்கா இல்லம் என்று மக்களால் அழைக்க பட்டது. அழைக்க பட்டதோடு இல்லாமல் வீட்டின் முன்பு கருப்பு வண்ண பலகையில் வெள்ளை வண்ண எழுத்துக்களால் மின்னிக் கொண்டிருந்தது கங்கா இல்லம் என்று.
வீடு முழுவதும் பேச்சும், சிரிப்பும்,கும்மலமாக இருக்க ரியா அழகிய பாவாடை தாவணியில் ஒரு தாம்பளம் நிறைய பூக்களை எடுத்துக் கொண்டு ஓடினாள். நகுலன் வீட்டின் முன் பகுதியில் தோரணம் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டிருக்க ராஜா சிவனுக்கு பூஜை செய்வதற்கு இறங்கி வந்தான் எப்போதும் கருப்பு வேட்டி சட்டையில் இருப்பவன் இப்போது எல்லாம் வெள்ளை நிறத்துக்கு மாறி கொண்டான். அவனை மாற்றியது கங்கா தான்.
ராஜா மீசையை முறுக்கி விட்டு இறங்கி வரவும் வீடே அமைதியானது ராஜாக்கு தான் பூஜை நேரத்தில் சத்தம் வந்தால் பிடிக்காது அல்லவா.
ராஜா பூஜை அறைக்கு வந்தவன் சின்ன புன்னகையுடன் அப்படியே நின்றிருந்தான் ஒரு நிமிடம். கங்கா அழகிய பட்டு புடவையில் நெற்றியில் குங்குமம் மின்ன கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாளி ஜொலிக்க தலை நிறைய மல்லிகை பூ வைத்து நெற்றியில் சின்ன பொட்டும் அதற்க்கு மேல் சிறு கீற்றாக குங்குமம் வைத்து மஞ்சள் பூசிய முகத்துக்கு அழகு சேர்க்கும் மூக்குத்தி மின்ன சிவன் லிங்கத்தை சுற்றி பூக்களை அடுக்கி கொண்டிருந்தாள்.
ராஜா உள்ளே அடி எடுத்து வைத்ததும் அவனை பார்த்து அழகாக சிரித்தவள் பூஜைக்கு தேவையான அனைத்தும் தயார் என்று கண் அசைத்து விட்டு நிமிர்ந்து நின்று கொண்டாள்.
ராஜா பூஜையை துவங்க கங்கா வெளியேறாமல் ராஜா அருகில் நின்றபடி சிவனை நோக்கி மனம் உருகி வேண்டிக் கொண்டாள். இப்போது எல்லாம் கங்காவும் ராஜாவுடன் முழு மனதாக பூஜையில் கலந்து கொள்வாள். சில நாட்களில் அவளே பூஜையும் செய்வாள்.
ராஜா பூஜையை முடித்து கங்காக்கு பொட்டு வைத்தவன் வெளியே சந்தோஷமாக பக்தி பரவசத்தில் நிற்க்கும் தன் குடும்பத்துக்கு ஆரத்தி கட்டினான்.
VOCÊ ESTÁ LENDO
ரணமே காதலானதே!! அரக்கனே!!
Romanceதந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?