29

5 0 0
                                    

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭

நேசம் -29

Disclaimer

இளகிய மனம் இருந்தால் தவிர்ந்து கொள்ளவும். இனி வரும் அதிதியாயங்கள் வாசிக்க பொறுமை அவசியம். இழப்புகளை தாங்கும் மனநிலை சில விடயங்களை ஏற்கும் பக்குவம் மிக அவசியம். கதையின் தேவைக்காக சில வன்முறை காட்சிகள் வசன நடை முகம் சுழிக்கும் வகையில் வரக்கூடும் . விரும்பாதவர்கள் தவிர்ந்து கொள்ளலாம். அனைத்து விமர்சனங்களும் ஏற்கப்படும். அடுத்த அடுத்த அத்தியாயங்களுக்காய் பொறுமையாக காத்திருப்பது அவசியம்.

🤍🍂🤍🍂🤍🍂🤍🍂


மரணம்

யாருக்கு

எப்போது

எப்படி வரும்
என்று தெரியவில்லை...

இன்று இதோ என்னை நெருங்குகிறது.

முடியாமல் விழிகளை மெதுவாக மூடுகிறேன்.

தசைகள் கிழிந்து நரம்புகள் வெடிக்கும் சத்தம் என் காதில் கேட்கிறது.

இதயமே இல்லாத எனக்குள்ளும் ஈரம் உண்டென உணர்த்தி செல்கிறது சாவின் இறுதி நொடியிலும் என் மனதிலே மின்னும் அந்த ஒரு முகம்.

யாராக இருக்கக்கூடும் இவள்...

இந்த பேரழகி ?

இந்த பிரபஞ்சத்தில் வாழும் தேவதை?

இவள் தான் ரித்துவா?

இவளை விட்டு எப்படி செல்வது முடியாத காரியம் அல்லவா?

சாவின் நொடியில் என் ஒட்டுமொத்த வாழ்வும் கண்ணுக்கு தெரிகிறது நான் மறந்த விடயங்களும் கூட...

ரித்துவை திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் ...

ஊரே கூடி போற்றும் அளவு பெரிதாக ஒன்றும் நடந்து விடவில்லை...

பிரபஞ்சத்தின் சாட்சியாக நானும் அவளும் மோதிரம் மாற்றிக் கொண்டோம். எங்கள் காதலை காணிக்கையாக்கி கொண்டோம். எனக்குள் அவளும் அவளுக்குள் நானும் தொலைந்து போனோம்.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Where stories live. Discover now