74 உயிர் வாங்கும் வலி

540 48 11
                                    

74 உயிர் வாங்கும் வலி

"நான் குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டேன்" என்றாள் நித்திலா.

அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் இனியவன். அவள் கூறிய வார்த்தைகள் சித்திரவேலின் காதில் திராவகத்தை ஊற்றியது. அவன் நித்திலாவின் தோள்களை கோபமாய் பற்றி,

"என்ன சொன்ன நீ?" என்றான்.

நித்திலா அமைதியாய் இருந்தாள்.

"சொல்லு நித்திலா, இப்போ நீ என்ன சொன்ன?" என்று அரற்றினான்.

"குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டேன்னு சொன்னேன்"

"உனக்கு எவ்வளவு தைரியம்? நீ எப்படி அந்த மாதிரி செய்யலாம்?அது என் குழந்தை. என்னைப் பத்தி யோசிக்காம நீ எப்படி அபார்ஷன் பண்ண? நான் அனாதையா இருந்தேன்... என் குடும்பம் முழுமை அடைய ஒரு வாரிசு எனக்கு வரணும்னு நான் எவ்வளவு ஆசையா காத்துக்கிட்டிருந்தேன்னு உனக்கு தெரியும் தானே? என் குழந்தையை கலைக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? சொல்லு நித்திலா..." என்று பைத்தியத்தை போல் கத்தினான் சித்திரவேல்.

நித்திலாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவள் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

"எதுக்காக இப்படி பண்ண? ஏன்? உனக்கு என்ன ஆச்சு? இந்த ஒரு சந்தோஷமான சந்தர்ப்பதுக்காக நம்ம எல்லாரும் எவ்வளவு காத்துகிட்டு இருந்தோம்? அறியா குழந்தையை  கலைக்க உனக்கு எப்படி மனசு வந்தது?" பாட்டி கதறி அழுதார்.

இப்பொழுதும் கல் போல நின்றாள் நித்திலா. அவளை தன் பக்கம் திரும்பிய சித்திரவேல்,

"நீ இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? எதுக்காக இப்படி வாயை மூடிக்கிட்டு இருக்க? என் குழந்தையை கொன்னுட்டு உன்னால எப்படி அமைதியா இருக்க முடியுது? உனக்கு இதயமே கிடையாதா? நீ எப்படி ஈவு இரக்கமில்லாதவளா மாறின?"

தன் பல்லை கடித்த நித்திலா, ஓங்கி சித்திரவேலை அறைந்து அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தாள். 

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now