ராம ராம☺️
"அண்ணா இந்த குங்குமத்த எங்க வைக்கிறது???
"அங்க ஓரமாக வை மா".
"அண்ணா எல்லாரும் செய்கிறத போல நம்ம செய கூடது அண்ணா. நம்ம வித்தியாசமாக செய்யலாம்".
"என்ன செய்யலாம்???
"அண்ணா என்ன தூக்கு".
"என்ன செய் போகிற???
"அண்ணா தூக்கு நான் சொல்கிறேன்".
அவன் தங்கை கூறியது போல் அவன் அவளை தூக்கினான். அவள் எட்டி அவள் முன் தொங்கிக்கொண்டிருந்த கோவில் மணி மீது அந்த குங்குமத்தை கொட்டினாள்.
"அண்ணா இறக்கி விடு".
"ஏய் இது தப்பு".
"பரவால்லை அண்ணா யாராவது பார்ப்பதற்குள் வா இங்கு இருந்து சென்றுவிடலாம்". பின் இரு பிள்ளைகளும் அங்கிருந்து புரப்பட்டனர்.
*****
வெண்ணையில் செய்த சிலை போல் ஓவியா அந்த கோவிலுக்குள் நுழைந்தாள். கரூம் மேகத்தை போல் அவளின் கூந்தல் இடை வரை சென்று மறைந்தது. அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளின் கூந்தல் அழகாக தலை ஆட்டியது. கரூம் பட்டாம்பூச்சி போல் அவள் கண்கள் மெல்ல துடித்தது. கச்சிதமாக வடிவமைத்த அவளின் மூக்கு ரோஜா இதழை விட மென்மையான அவளின் உதட்டிக்கு அழகூட்டியது. அவளின் வடிவம் சிறந்த சிற்ப்பிக்கே ஒரு சவால். அவள் கேரள புடவையில் மெல்ல நடந்து வர அந்த வெண் மேகமே தரை இறங்கியது போல் தோன்றியது. அதற்கு இனையாக அவள் அணிந்து இருந்து சிவப்பு பட்டு ரவிக்கை அவளுக்கு மேலும் அழகூட்டியது. அவள் மெல்ல நடக்க அவளின் பாத கொலுசுகள் பின் இசை பாடியது.
அவள் சாமி முன்பு சென்று நின்று கண்களை மூடி கைகளை இனைத்து கடவுளை வேண்டினாள்.தன் தாயின் வேண்டுதலை நிறைவேற்ற வாசு காவடியை சுமந்து கோவிலை சுற்றி வந்தான். பூவை சுமப்பது போல் காவடியை இதமாக அவன் தோளில் சுமந்து நடந்தான். அவனின் வலிமையான உடலமைப்பை பார்த்து அங்குள்ள அனைத்து பெண்களும் மயங்கினர். அவன் கோவிலை சுற்றி வந்து காவடியை இறக்கி வைத்தான். சாமி முன் சென்று நின்று கண்களை மூடி சாமியை வணங்கினான். அவன் கண் விழித்து கடவுளின் கால்களை முதலில் கண்டான். அந்த அழகிய முருகனை காலில் இருந்து தலை வரை வணங்கினான். மனதில் ஒருவித அமைதி தோன்றியது. அவன் எதிரே உள்ள கோவில் மணியை தன் வலது கையால் தட்டினான்.