இஇஇரரரவுவுவு 11:43
"எந்த தைரியத்துல வந்தேன்?காத்து கொஞ்சம் வேமா அடிச்சாலே அடிவயிறு கலக்கி அந்த இடத்திலே அத போயிடுவேன்......ஆனா இந்த நேரத்துல தனியா ...எப்படி வந்தேன்"என்று தன் திடீர் தைரியத்தை கேள்வி கேக்க ஆரமித்தான் அமர்
அமர் நடந்துக் கொன்டிருந்த ரோட்டில் யாருமே இல்லை.இரு பக்கமும் மரங்கள்......தரை முழுக்க காய்ந்த சருகுகள்....கண்சிமிட்டாமல் அவனையே வெறித்துப் பார்க்கும் பெளர்ளமி நிலா மட்டுமே அவனுக்கு துணை....நேரம் கூட கூட பயம் அதிகரித்தது அமருக்கு.
பாட்டி சொன்ன பழைய கதைகள்,படத்தில் பார்த்த பேய் காட்சிகள் எல்லாம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டன........
அவன் காலடி சத்தங்களே அவனுக்கு பயம் கொடுத்தது.
உடல் முழுக்க வியர்க்கத் தொடங்கியது.கையில் கட்டிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்..12:00......"ஐயோ! இது பேய் வாக்கிங் போற டைம் ஆச்சே! சே
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போகாமலே இருந்திருக்கலாம்....இப்ப இவ்வளவு பயப்பட வேண்டி இருக்கு...எல்லாம் பாலானால தான்....நாளைக்கு அவன் வரட்டும்....ஐயோ!நாளை வரைக்கும் நான் இருப்பேனா?இல்ல இன்னைக்கே ஏதாவது பேய்.....................இல்ல இல்ல அப்படி லாம் ஒன்னும் ஆகாது"
பயத்தை மறைக்க பாட்டு பாட ஆரம்பித்தான் அமர்.
"செல்லாத்தா! செல்லமாரி யாத்தா!
இந்த அமர் பிள்ளை ய வீட்டுல சேத்துடு ஆத்தா!!!
காளியாத்தா!கா. ......ளி..த்......"
பாட்டை பாதியில் நிறுத்தி விட்டான்.தூரத்தில் ஒரு உருவம்,பெண் போன்ற உருவம்....மஞ்சள் சேலை தலை நிறைய பூ...ஆம் அது .....அது தான்....ஒரு விதமான இராட்சச நடை ...ஐயோ!எனக்கு மட்டும் ஏன் இப்படி
"ஐயோ! சந்திரமுகிப் படத்துல வர ராரா பேய் மாதிரி இருக்கே.இது யார தேடி வந்துச்சோ யாரக் கொல்லப் போகுதோ"
காலடி சத்தம் கேட்காமல் மெதுவாக நடந்து அந்த உருவத்தைப் பின்தொடர்ந்தான் அமர்.அதை தாண்டிப் போனால் அது அவனைப் பார்த்து விடுமல்லவா?அந்த பயம் தான் அமருக்கு.அதனால் அந்த உருவத்தைப் பின்தொடர்ந்தே பாதி தூரம் வந்து விட்டான்.
திடீரென அந்த உருவம் நின்றது.அவனும் நின்று விட்டான்.
மெதுவான அதாவது slowmotion இல் அந்த உருவம் திரும்பியதுதிக்...திக் தி்க்
தொடரும்.......
YOU ARE READING
நான் அவள் இல்லை
Horror#8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழ...