இன்றளவும் எங்கேனும் ஒரு
புத்தகக் கடையைக் கண்டால்
அங்கேயே நின்றுவிடுகிறாய் நீ.உனது வாசிப்பு
வகையறியாதது.கல்கண்டு தொடங்கி
கணையாழி வரைக்கும்.உன் வாசிப்பு
மொழி தாண்டியதாய்
இருக்கிறது.தாகூரும் ராபர்ட் ஃப்ராஸ்டும்
உன் ஒன்று விட்ட
கொள்ளுத் தாத்தாக்களாய்
இருக்கிறார்கள்.மேன்மேலும்
வாசிக்கிறாய்..பெங்காலி படித்தாய்.
ஜப்பானிய மொழியறிந்தாய்.
தற்போது ஸ்பானிஷ்..இடையிடையே
அஸ்ட்ரானமி மற்றும்
அஸ்டராலஜியும்
படித்தாய்.இப்படி
புத்தகங்களுடனான
உன்னுடைய காதலை
சொல்லிமுடியாது.ஆனால்
உன் கைபிடித்து
விளையாட்டாய்
ரேகை பார்த்து
பலன் சொல்வதாய் கூற
அது பொய்யெனத் தெரிந்தும்
முகமலர்ந்து என்
காலடியில் அமர்ந்து
மடிமீது வலக்கை
விரிக்கிறாய்.என்மீது நீ கொண்ட
பெருங்காதலில்
கற்றதையெல்லாம்
விட்டுவிட்டு
கசிந்துருகி நிற்கின்றாய்.என்றென்றும்
மீராவாய் இருந்து
உன் காதலினாலேயே
என்னைக் கடவுளாக்கிக்
கொண்டிருக்கிறாய்.
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்