அவனும் ஒருவன்.

30 5 0
                                    

அவனை
உங்களுக்கு தெரிந்திருந்த மாதிரியேதான்
எனக்கும் தெரியும்.

நான் பார்த்த மாதிரியே
நீங்களும் அவனை உங்கள் வெளித்திண்ணைக்கருகிலோ
தெருமுனையின் மத்தியிலோ
அல்லது
திறந்த சாக்கடையின் அருகிலோதான்
தினந்தினம் பார்த்திருக்கிறீர்கள்.

குப்பென்று வீசும்
சாராய நெடியுடன்
கட்டியிருக்கும்
கிழிந்த கைலியோ
அல்லது
முனபென்றைக்கோ ஒருநாள்
வெள்ளையாயிருந்த வேட்டியோ
தொடைவரை ஏறியிருக்க
கைகளையும் கால்களையும்
அங்குமிங்கும் பரப்பியபடி
தெருவில் கன்னமழுந்த
உளறிக்கொண்டோ
தூங்கிக் கொண்டோ
இருக்கும் அவனை
உங்களைப் போலவே
ஒரு பெரும் முகஞ்சுழிப்புடன்தான்
நானும் கடந்து போயிருக்கிறேன்.

உளறல் கலந்த
தூக்கத்திற்கு முன்பாக
என்னையையோ
உங்களையோ
அல்லது எவரையோ
எதுவையோ என்று
உங்களாலும் என்னாலும்
இனங்கொள்ள முடியாதவாறு
அவன் வசைபாடிக் கொண்டிருக்கும்போது
அவனிருக்கும் தெருமுனை கடக்க
என்னைப் போலவே நீங்களும்
மாற்றுப் பாதையைத்
தேடிக் கொண்டீர்கள்.

உங்கள் பார்வையிலிருந்தும்
எந்தன் பார்வையிலிருந்தும்
அவன் காணாமலே போன
அந்த ஒரு நாளிலிருந்தே
உள்ளிருந்து அழுத்தும்
இனம்புரியா உணர்வின்
பெருக்கால்,
அன்றுவரை 'குடிகாரப்பய...'
என்று மட்டுமே
அறியப்பட்ட
அவனைப் பற்றி
தெரிந்தவர்களிடமெல்லாம்
விசாரிக்கத் தொடங்கினேன்
உங்களைப் போலவே நானும்.

கோட்டோவியங்கள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang