வீட்டின் மூன்றாந் தட்டில்
அம்மாவின் சாமிமாடத்துக்கருகே
வலப்புற முன்காலொடைசலுக்கு
சிறு இரும்பு வளையம்
தாங்கியாய் கொண்டு
நிற்கும் அந்த
அப்பாவின் மர அலமாரியில்
சி.பரதன்
பாரத் சிறுசேமிப்பு
என அவர் பெயரும் தொழிலும்
வலப்புறக் கதவில்
மஞ்சள் பெயிண்டில்
எழுதி வைத்திருக்கும்.சின்னச்சின்னதாய்
நான்கடுக்குகள்
கொண்டதந்த அலமாரி.வாடிக்கையாளர்களுக்கு
கொடுக்கவேண்டி
பாரத் சிறுசேமிப்பின்
பெயர் பொறித்த
சிறுசிறு கட்டங்களிட்ட
ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு எண் கொண்ட
தனித்தனி அட்டைகளும்,
ஐம்பதைம்பது பக்கங்கள்
கொண்ட நோட்டுப் புத்தகங்களும்
மேலிருந்து கீழாய்
முதலிரண்டு தட்டுகளிலும்
நிறைந்திருக்கும்.மூன்றாம் தட்டில்
இஸ்திரி வண்டிக்காரனிடமே
வெளுக்கவும் தேய்க்கவும்
கொடுத்து வாங்கிய
வெள்ளை வேட்டிகளும்
வெள்ளைச் சட்டைகளும்.நான்காம் தட்டில்
அப்பா தினந்தினம்
சிறுசேமிப்பிற்கு காசு பிரிக்க
எடுத்துச் செல்லும்
ஒரு சிறிய தோல்பை இருக்கும்.அலமாரி இன்றும்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
அதை உபயோகிக்க
அப்பாதான் இல்லை.
ВЫ ЧИТАЕТЕ
கோட்டோவியங்கள்
Поэзия~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்