எழுதி முடிக்காத கவிதை

27 7 0
                                    

வெகுநாட்களாய்
மனதோடு சண்டைபிடித்துக்
கொண்டிருக்கிறது
இன்னும் எழுதி முடிக்காத
கவிதையொன்று.

மகரந்த சூல் கொண்ட
பூவைப் போல
பாரந்தாங்காமல்
அல்லாடிக் கொண்டிருக்கும்
மனதினைப் பார்த்து
நமுட்டுச் சிரிப்பு
சிரிக்கிறதந்தக் கவிதை.

எழுதி முடித்துவிட்டடால்
மனசின்
பெருஞ்சுமையை
பெரும் வலியை
தான் காலமெல்லாம்
தாங்கவேண்டியிருக்கும்
எனபதையும் 
அது அறிந்தேயிருந்தது.

கோட்டோவியங்கள்Donde viven las historias. Descúbrelo ahora