இக்கணம் இப்படி வாய்க்குமென
இதுகாறும் நினைக்கவில்லை.
தூரத்தில் நின்று பார்த்துக்
களித்தவாறே திரும்பிவிடத்தான்
எண்ணிமிருந்ததப்போது.
உனை வருத்த நினைத்ததில்லை
எனினும் அது நிகழ்நதே விட்டது.
தவிர்த்திருக்கலாம்தான் நானவனை
பறிமாற எனை அழைத்தபோதும்
பக்கத்தில் நின்று புகைப்படமெடுத்தபோதும்
கூடவே உன்னை அறிமுகஞ்செய விரும்பி தன்னோடு மேடையேற்றிய போதும்.
கடைசிமுறை அருகாமைக்காய்
மனம் மயங்கித்தான் போய்விட்டது.
தளும்பும் துளிக் கண்ணீரை
நெற்றிவியர்வை ஒற்றுவதாய்
துடைத்துக் கொள்.
நேரு பூங்காவில் என் முதுகில்
உன் முதுகு சாய்த்து
நீ படித்த கணையாழி கவிதைகளையும்
ஆளற்ற ஆற்றங்கரைப் படிக்கட்டில்
ஒரேயொருமுறை
என் கரம்பிடித்து நீ பறிமாறிய
உன் கணச்சூட்டையும் தான்
இந்தக் கித்தான் காகிதத்தில்
சுற்றியெடுத்து வந்திருக்கிறேன்
உனக்கான பரிசாக.
தவிர்த்திருக்கலாம் தான்.
நான் உன் திருமணத்திற்கு வந்ததை.
நீ எனக்கு அழைப்பிதழ் வைத்ததை.
அதற்கெல்லாம் முன்னர்
நாமிருவரும் நம் காதல் பகிர்ந்ததை.
BẠN ĐANG ĐỌC
கோட்டோவியங்கள்
Thơ ca~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்