ஏக்கு பார் ஆஜாவை
உத்வேகமாய் உரக்க பாடிக்கொண்டிருக்கும்
உள்ளூர் உதித்நாராயணனுக்குப்
பின்னால்
வாடகைக் குதிரையிலமர்ந்து
வாடகைக்கெடுத்த ஷெர்வானி அணிந்த
நவீன ப்ரித்தீவி மகராஜா
வெளிச்சுற்று நகரத்தில்
மூன்று பெட்ரூம் வீடோடும்
ஐட்டொன்டி காரோடும்
இன்னபிற தாகீச்சுகளோடும்
காத்திருக்கும்
சம்யுக்தையை கவர்ந்தெடுக்க
ராவோடு ராவாக
சுற்றம் புடைசூழ
ஊர்வலமாய் ஊர்ந்து போகிறான்
நகரப் போக்குவரத்து நெரிசலில்.
ESTÁS LEYENDO
கோட்டோவியங்கள்
Poesía~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்