வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன நீ வந்தபோது
உன் தலையுதிர்ந்த மல்லிகைகள்.அறையெங்கும் எதிரொலிக்கிறது
உன் குரலொலிகள்
சிரிப்பொலிகளாயும்
நீ வாசித்து ரசித்து போன
என்னுடைய கவிதை வரிகளின் வார்த்தை ஒலிகளாயும்.பெரியதொரு காட்சியாய்
நீ உன் முகம் அலங்கரித்ததை
மீண்டும் மீண்டும் படமாய்
காட்டிக் கொண்டிருக்கிறது
முகங்காட்டும் கண்ணாடியில்
இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும்
சின்னதொரு ஒட்டுப் பொட்டு.நட்பாய்த் தொடங்கிய நம் உறவு
காதலாய் பரிணமிக்கத்
துவங்கிவிட்டதை அறிந்திருந்தும்
பரிமாறிக் கொள்ளாமல்
ஏனிந்த வறட்டு கௌரவம்
நம்மிருவருக்கும்.உன் விழிகள் முன்மொழிந்த
உன் காதலை நீயெப்போது
வழிமொழியப் போகிறாய்.
VOUS LISEZ
கோட்டோவியங்கள்
Poésie~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்