நதியில் முங்கிக்குளித்து கழனியில் ஏரோட்டி
விவசாயம் பார்த்த அப்பாவுக்கு
ஒட்டவேயில்லை இந்த
நகர்புற வாசமும்
அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையும்.வாளித் தண்ணீரில்
மொண்டு குளிக்கவும்
காங்கிரீட் தரையில்
காலுரசி நடக்கவும்
முடியாமல் போகிறதவருக்கு.ஊரெல்லாம் சொந்தமெனச்சொல்லி
அன்னியோன்யமாய் இருந்தவருக்கு
அடுத்த வீடுகூட அன்னியமாகிபோனப்
பட்டணத்து வாழ்க்கையில்
பரிதவித்துத்தான் போய்விட்டாரவர்.மொட்டைமாடியில் தோட்டமிட்டு
காய்கறி பயிரிடுதலில் கொஞ்சமாய் மிச்சம் வைத்திருக்கிறார்
இன்னும் அவர் தன் உயிரை.
KAMU SEDANG MEMBACA
கோட்டோவியங்கள்
Puisi~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்