மீன்காரி

27 2 0
                                    

வலையில் சிக்காத மீன்கள்.
=======================
மீனறுத்து எடையிடுமவளின்
முந்தானை விலகலில் பார்வையை
நிலைகுத்தி நிற்குமுன்
குறியறுத்துப்போடும் கூர்மையுண்டு அவள் கத்திக்கு.
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
அவள் மௌனத்தின்
ஆங்காரமறியாத
பூஞ்சை வாடிக்கையாளன் நீ.
நடுக்குளத்தில்
தொடையளவு ஆழத்தில்
கைபரப்பி வீசியெறியும்
அவள்  வலையிழுக்க
வலுவில்லாக் கைகளைக்
கொண்டவன் நீ.
வலையில் சிக்கிய
சிறுமீன் குஞ்சுகளை
மீண்டும் குளத்துக்குள் விட்டுவிட்டு 
குறுநகை பூப்பவள் அவள்.
சுருட்டிக் கொண்டு போ
உன் வாலையும்
எச்சிலொழுக நீட்டிக் கொண்டிருக்கும் உன் நாக்கையும்.

கோட்டோவியங்கள்Donde viven las historias. Descúbrelo ahora