எப்போதும் இருகரையடைத்து
ஓடிக்கொண்டிருந்த எங்கள் நதி
ஆரம்பத்தில் நதியாகத்தானிருந்தது.
நீர் மொண்ட பெண்டீரும்
நீச்சல் பழகிய குழந்தைகளும்
நீந்திக்குளித்த எம்முன்னோரும்
கொண்டாடிக்களித்த நதியது.
எங்கள் நாகரீகத்தை வளர்த்த
அந்த நதிக்கரைகளில் தான்
நாங்கள்
சங்கம் வைத்தெம் மொழி வளர்த்தோம்.
மொழிவைத்தெம் காதல் வளர்த்தோம்.
தொழிற்சாலைகளை நதிக்கரையில்
நிறுவிக் கொண்ட நீங்கள் ....
எங்கள் மேய்ச்சல் நிலங்களை
சொந்தமாக்கிக் கொண்ட நீங்கள்....
எங்கள் விவசாயங்களைப்
பொய்க்கச் செய்த நீங்கள்....
எங்கள் விவசாயிகளைத்
தொழிலாக்கிய நீங்கள்....
எங்கள் நதியில் உங்கள்
கழிவுகளைக் கலந்த நீங்கள்....நதியையும் நதிக்கரையையும்
எங்கள் ஞாபகங்களாக்கி
மார்தட்டிக் கொண்டீர்.
ESTÁS LEYENDO
கோட்டோவியங்கள்
Poesía~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்