தன்முயற்சியில் தளராத
விக்கிரமாதித்யனாய்
மீண்டும் வரைய ஆரம்பித்த
ஓவியனின் ஓவியத்தில்
இம்முறை
வரைதிரையும் வர்ணங்களும்
சண்டையிட்டுக் கொள்ள
வேடிக்கை பார்த்தத் தூரிகைக்
கொண்டாடி கழித்தது.
சமாதானத் தூதுவனாய்
அவதரித்தத் தூரிகையோ
சண்டையின் சாராம்சம்
குறையாதிருக்கும்படி
கச்சிதமாக பார்த்துக் கொண்டது.
இந்த மூன்றுக்கும் நடுவில்
உங்களைப் போல ..
என்னைப் போல ....
நம்மைப் போல...
பித்தாய் நின்றான் ஓவியன்.
ŞİMDİ OKUDUĞUN
கோட்டோவியங்கள்
Şiir~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்