நாம் சாவின் விளிம்பிற்கு சென்று வந்தவர்களின் அனுபவங்களை பற்றி பார்த்தோம். அவை எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
நமது மூளையில் டெம்போரோபாரீட்டல் சந்திப்பு ( temporoparietal junction) உள்ளது, இது நம் உறுப்புகள் மற்றும் உடலின்உணர்வுகள் சேகரித்த தகவல்களைஒன்று திரட்டி ஒருவரின் கருத்தை உருவாக்குகிறது. அதாவது நாம் ஒன்றை பற்றி சிந்திக்கும் திறன் இதை சார்ந்துதான் உள்ளது.
இந்த பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் போது ஒருவருக்கு உடலை விட்டு வெளியே வந்த( out of the body experience) அனுபவம் ஏற்படுகிறது.
இந்த உடலை தாண்டிய அனுபவத்தின் போது பலர் சொன்ன ஒன்று தாங்கள் ஒரு குகையின் இறுதியில் ஒளியை காண்டது.
இது கரியமிலவளி( carbondioxide) மிகுதியால் ஏற்படுவது ஆகும். நம் மூளைக்கு அதிக அளவில் கரியமிலவளி செல்லும் போது அது நம் பார்க்கும் தன்மையை பாதிக்கிறது, எனவே ஒரு அமைதியான இன்ப அனுபவம் கிடைக்கும்.
அதே போன்று மூளைக்கு பிராண வாயு செல்வது தடைபடும் பொழுது பலருக்கு மாய தோற்றங்கள் தோன்றும். இறந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை காண இதுவே காரணம் ஆகும். சிலருக்கு அவர்கள் வாழ்கையே ஒரு படம் போல் தோன்றி மறையும். அவர்கள் மூளையில் உள்ள அனைத்து நியாபகங்களும் இவ்வாறு தோன்றி மறையும்.
VOCÊ ESTÁ LENDO
மாய உலகை தேடி- மறுபக்கம்
Paranormalநாணயத்தின் இரு பக்கம் போல நிழல் எது நிஜம் எது என்று ஆன்மாவை தேடும் பயணம் இது. மாய உலகை தேடியின் துணை பாகம் இது.