புரிதல் 2

382 27 79
                                    

நான் 12 ஆவது படிக்கும் பொழுது நடந்த சம்பவம் இது. இரவு படித்து விட்டு வெகு நேரம் கழித்து தூங்கினேன். நடு இரவில் திடீரென என் பக்கம் யாரோ நிற்பதை போல் உணர்ந்தேன், என்னுடைய இதயம் பலமாக அடித்துக் கொண்டது.. அந்த உருவம் என்னை நெருங்கியது.. என்மேல் அது உரசுவது போல் நின்றது. நான் கண்ணை இன்னும் இருக்கமாக மூடிக்கொண்டேன். மூச்சு முட்ட தொடங்கியது எனக்கு, சுவாசிக்க சிரமப்பட்டேன். எப்படியாவது கண்ணை திறந்து விட வேண்டும் என்று பார்த்தேன். பாதி திறந்த இமைகளுக்கு இடையே கரிய நிழல் உருவம் ஒன்று தெரிந்தது. என் பலம் கொண்டு கத்தினேன்.. அம்மாஆஆஆஆ

ம்ஹும்.. சத்தமே வரவில்லை.. மனதில் அந்த உருவத்திடம் போ.. போ .. என்று கத்திகொண்டிருந்தேன். பின் கந்த சஷ்டி கவசம் மனதில் பாட துவங்கினேன்.. அந்த உருவம் என்னை விட்டு விலகியது.. மூச்சு சீராக இயங்க துவங்கியது. பின் மெல்ல கண் விழித்து பார்த்தேன்.. யாரும் இல்லை அங்கே. திரும்பவும் தூங்க போக பயம்.. நேராக சாமி அறைக்கு சென்று பெரிய பட்டையாக திருநீரை பூசிக்கொண்டு படுத்தேன். அப்பாடாஆஆ..  ம்ம்ம்.. நல்ல தூக்கம்.

ஒரு வாரத்திற்கு எனக்கு இப்படி இது தொடர்ந்தது. இது நடக்கும் பொழுது எல்லாம் கண்ணை இருக்கி மூடிக்கொண்டு இது நிஜமல்ல நிஜமல்ல என்று சொல்லிக்கொள்வேன்... இது பேய் பிசாசு வேலை என்று நினைக்கிறீர்களா? அமுக்குவான் பேய் என்று இதை கூறுகின்றனர். இது வர சில அறிகுறிகள் உண்டு..

அப்படி சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? 😂😂😜 அதுதான் இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் இங்கு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதற்கு பேர் என்ன? எதனால் ஏற்படுகிறது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

இந்த நிலைக்கு( sleep paralysis )துயில் வாதம் என்று பெயர். இந்த நிகழ்வின் போது விழித்திருக்கும் நிலையில் எச்செயலையும், அதாவது பேசவோ, எழுந்திரிக்கவோ, கை, கால்களை அசைக்கவோ முடியாத நிலையில் இருப்பதாகும். இது விழித்திருக்கும் நிலை மற்றும் தூக்கத்திற்கு இடைப்பட்ட, முழுத்தசை பலவீனத்தால் ஏற்படுவதாகும். பத்தில் 4 பேர் நிச்சயம் இந்த தூக்க பக்கவாதத்தை அனுபவித்திருப்பார்கள். இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். முக்கியமாக இந்த நிலை ஏற்படுவதற்கு, அதிகப்படியான பயத்துடன் தூங்குவது, தூக்கமின்மை, தூங்கும் நேரத்தில் மாற்றம், அதிகப்படியான மன அழுத்தம், முதுகில் படுப்பது, ஒருசில மருந்துகள் போன்றவை இந்த தூக்க பக்கவாத்திற்கு காரணிகளாகும்.
( நான் ஓவரா படிச்சிட்டு குப்புறகௌந்தடிச்சு படுத்தது தான் எனக்கு அப்படி நடக்க காரணம்).

மாய உலகை தேடி- மறுபக்கம்Where stories live. Discover now