புரிதல் 3

221 20 53
                                    

ஓஜா பலகை..( Ouija board) அதை பற்றி பார்ப்போமா? இதன் பெயரை கேட்டாலே பலருக்கும் பய உணர்வு தான் வரும். ஆனால் இதை பற்றி சுவாரசியமான உண்மைகள் உண்டு. இந்த பலகை உண்மையாகவே ஆன்மா சம்மந்தபட்டதா? இல்லை.. இதை முதன் முதலில் விளையாட்டு பலகையாக தான் உபயோகப்படுத்தி உள்ளனர்.. பின்னாளில் இது ஆன்மாக்களோடு பேச பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். உண்மையிலேயே ஆவிகளுடன் இதன் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா? முடியாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

ஓஜா பலகை எப்படி வேலை செய்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரோ இல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட நபரோ அந்த பலகையின் மேல் உள்ள சுட்டியில் ஒரு விரலை வைத்து கேள்விகள் கேட்க, அந்த சுட்டி எழுத்துக்களின் மேல் நகர்ந்து கேள்விக்கான விடையை தரும். இது ஆன்மாக்களின் வேலை, அவைகள் தான் இதன் மூலம் நம்மை தொடர்புக்கொண்டு நமக்கு விடை தெரியா கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன என்று பலரும் நம்புகின்றனர் (விரிவாக மாயா உலகை தேடியில் இதை காணலாம்)

இவ்வாறு தானாக நகரும் பேசும் பலகையை எல்லோரும் விந்தையுடனும் பயத்துடனும் பார்ப்பது ஆச்சரியமில்லை தான். இந்த பலகை இயங்கும் முறையை அறிவியலாளர்கள் ideomotor phenomenon என்று கூறுகின்றனர். இந்த பலகையை ஆன்மாக்கள் இயக்கவில்லை, நாம் தான் அதை இயக்குகிறோம் என்று உரைகின்றனர். இந்த நிகழ்வானது ஒருவர் தன்னை அறியாமலே செய்யும் ஒரு வினை ஆகும். "ஐயோமோட்டார் ரிஃப்ளெக்ஸ்" ideo (idea) மற்றும் motor ( muscle action) இணைந்ததே ideomotor நிகழ்வாகும்.

மூலையில் தோன்றும் எண்ணங்களை ஒருவருடைய கட்டுப்பாடு இல்லாமல் செயலாற்றுவதே இந்த ஓஜா பலகையின் ரகசியம் ஆகும்

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

மூலையில் தோன்றும் எண்ணங்களை ஒருவருடைய கட்டுப்பாடு இல்லாமல் செயலாற்றுவதே இந்த ஓஜா பலகையின் ரகசியம் ஆகும். சூடான பாத்திரத்தை நாம் தொடும் போது நம்மையும் அறியாமல் கை தன்னிச்சையாக எடுத்துக்கொள்வது..  எலுமிச்சை என்று சொல்லும் போது நாவில் எச்சில் ஊறுவது போன்று இந்த நிகழ்வும் ஒருவர் தன்னை அறியாமலே செயலாற்றக்கூடிய ஒன்றாகும். இதை இயக்குபவர் கேள்வி கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அதற்கான பதிலும் அவர் மனதிலேயே உருவாகும், ஆனால் அதை அவர் அறியாமல் தானாக அந்த சுட்டி இயங்குவதாக நினைத்து கொள்ளுவார்கள். சுவாதீனம் இல்லாமல் அவர்கள் கை செயலாற்றும். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இதை இயக்கும் பொழுதும் அவர்கள் கூட்டு யோசனை இதை செயல்படுத்தலாம். பல நேரங்களில் அர்த்தமற்ற செய்திகளே கிடைக்கும், வார்த்தைகள் கூட உருவாகாத நிலை இருக்கும்.

இதில் பங்கேற்பவர்களின் கண்களை கட்டி இதை இயக்கினால் பெரும்பாலும் இது வேலை செய்வது இல்லை என்றே கூறுகின்றனர். இந்த விளைவை விளக்க: allow a hand-held pendulum to hover over a sheet of paper. The paper has keywords such as YES, NO and MAYBE printed on it. Small movements in the hand, in response to questions, can cause the pendulum to move towards key words on the paper.

அடுத்த பதிவில் இன்னும் விரிவாக காணலாம்

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

அடுத்த பதிவில் இன்னும் விரிவாக காணலாம்..

Você leu todos os capítulos publicados.

⏰ Última atualização: Aug 07, 2017 ⏰

Adicione esta história à sua Biblioteca e seja notificado quando novos capítulos chegarem!

மாய உலகை தேடி- மறுபக்கம்Onde histórias criam vida. Descubra agora