"இப்படி என்னை
பாதுகாத்த உன்னை!என்
சரி பாதி என்று
உனக்கு பதிலாய்
என்னை பார்த்துக்கொள்வாள் என்று
நீ
மருமகளாய்
கொண்டு வந்தவள்
நார் நாராய் கிழிப்பதில்
எனக்கு உடன்பாடில்லை.நான் இருக்கும்
சமயத்தில் பார்த்துக்கொள்வேன்
நான் இல்லா சமயத்தில்
என்ன செய்வது?
உன்னை அவளிடம்
இருந்து பாதுகாக்க!
நீ
நிம்மதியாய்
பயம் இல்லாமல் இருக்க
நான் பார்த்த இடம்
முதியோர் இல்லம்!மகனும்
பேரக்குழந்தைகளும்
கடைசி காலத்தில்
உடன்இல்லையே
என்ற வேதனையில்
நீ !கடைசி காலத்தில்
வாயால் வறுபடாமல்
இருக்கவேண்டும்
என்றாலும்
பெற்றவளை கூட
வைத்துக்கொள்ள
முடியாதவனாய்
நான்!உனக்கு ஆறுதல்
சொல்ல
உன் வயதில்
நிறையபேர்!நான் ஆறுதலாய்
யார்
தோள் சாய்வது!
அம்மா......!அடுத்த பிறவியிலும்
உன் மகனாய்
பிறக்கவேண்டும்
அதிலாவது
உன் ஆயுள் முழுதும்
நான் உடன்
இருக்க வேண்டும்என்றும் அன்புடன்
உன் நினைவில் வாழும்
..........."- தர்ஷினிசிதம்பரம்
