"கைப்பிடி அளவு
பச்சரிசி மாவெடுத்து
பதமா வெந்நீர் ஊத்தி
நீ பிசஞ்சு
தேங்காய் சில்லு
ரெண்டு உடைத்து
இனிப்பிற்கு வெல்லம்
நீ கலந்து
உள்ளங்கையில் மாவையுமே
தட்டைபோல் தட்டுதட்டி
பூரணம் மட்டும்
சூரணம் போல்
உள்ளேவைத்து
பிடி பிடியென
நீ பிடிக்க
உன் விருப்பம்போல
வந்துதிடுமே
எனக்கு பிடித்தக்கொழுக்கட்டை!"- தர்ஷினிசிதம்பரம்
