இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த காற்று தென்னங்கீற்றை வருடி எடுத்து வந்த தென்றலின் இன்னிசை கூடிய ஓர் இதமான காற்று சட்டென்று அவன் மீது வீச என்ன காரணமென்று புரியவில்லை. அது ஒரு மாலை பொழுது மேற்கே கீழ் வானம் சிவந்து கிடந்தது வீசிய காற்று மேற்கே அவனை திருப்பியது. கீழ் வான சிவப்பிற்க்கு போட்டியாக வெட்கம் சிவக்க அவள் நடந்து வந்தாள். விற்றென்று அந்த சிவப்பில் ஓர் மின்னால் வெட்டியது அவள் கடைக்கண் பார்வையின் வீச்சு அது.
மையம் கொண்ட புயலை எதிர்பார்வையிட மின்னல் வந்த நேரமது. சிவந்த வெட்கம் கொஞ்சும் நானம் கொஞ்சம் பார்வையென அவள் நெருங்கி வரும்போதே அவன் உடம்பெல்லாம அனலேறியது ஆயிரம் அரிவைகள் கூடி நின்றபோதிலும் கண் பார்ப்பவன் இன்று இவள் கண்னை பார்க்கமுடியாமல் வெட்கம்தலைக்கேற அவள் கால் கொலுசின் ஓசை வெளிவரும் இடம் பார்க்க சென்றான். ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை முழுமையாக அன்று தான் உணர்ந்தான். எத்துனையோ முறை பார்த்து பழகிய முகம், இருந்தபோதும் இன்று அவன் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் அது ஒரு ரசாயன மாற்றமாக இருக்கலாம் காதல் அனுக்களை உயிர்க்காற்று ரசாயன கலவையின் துணை கொண்டு எங்கோ கடத்தி சென்று கொண்டிருந்தன் காரதணமாக இருக்கலாம்.
முதல் பார்வையிலே காதல் வந்து தொற்றிக்கொள்ள அவன் அவ்வளவு பலவீனமாகவும் இல்லை அதேபோல முதல் சந்திப்பிலே காதலில் விழும் பலம் அவள் அகராதியிலே இல்லை ம்ஹூம் அது பெண்கள் அகராதியிலே இல்லை.
புயல் கரையைகடப்பதற்கு மாறாக அன்று மின்னல் புயலை கடத்தி சென்றது.
இப்படி சில காதல் சேஷ்டைகள் நடைபெறுவது வழக்கம் தான் ஆனால் இந்த சேஷ்டை உணர்வுகளுக்குள் ஊடுருவி காதலின் வெட்கசிவந்த குழம்பில் இருவரையும் தள்ளிவிட்டு இருவரும் தத்தளிப்பதை பார்த்து வேடிக்கை பார்க்கும் காதலின் கோர இன்முகம் எவ்வளவு இனிமையானது என்று உணர்திட மனிதனாய் ஜனனம் எடுத்த அத்துனை பிறவிகளையும் காதல் கடலில் முங்கி தூய்மைபடுத்த இறைவன் எத்தனித்த அவதாரமே என்று வகையறுக்க வந்தது தான் காதல் என்று இங்கு குறிப்பிடும் போது அதை உணர்ந்தவர்கள் பொன்முறுவலும் உணராதவர்கள் நமட்டு சிரிப்பையும் வெளிப்படுத்துவது இங்கே தவிர்க்க முடியாதது. அப்படி நமட்டு சிரிப்போடு மேற்கொண்டு பின் தொடர்ந்து காதலில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுதான் காதலின் சாசனம். அது காயங்கள் தரும் காயத்திற்கு மருந்துகள் தரும் வலியின் உணர்வை தரும் உணர்வில் வடுவை தரும் மொத்தத்தில் அது இறைவனை காண ஏங்கும் முடிவில்லா பேரின்பத்தை தரும்.
ESTÁS LEYENDO
களவாடிய தருணங்கள்
Romanceகாதலை சொல்ல ஒரு நொடி போதும் ஆனால் காதல் களவாடிய தருணங்களை சொல்ல ஒரு ஆயுள் வேண்டும் காதலை சொல்லி காத்திருப்பது சுகம் தான் ஆனால் விலகி சென்று கொல்லாதே பார்க்காமல் பேசாமல் வாழ்க்கையின் அர்த்தத்தையே தொலைத்திடாதே இப்படி காதல் களவாடிய தருணங்களை அவளிடம்...