ஆரா தேன்மொழியை வரச் சொல்லி போன் செய்த நேரம் ரஞ்சித் நினைப்பில் இருந்த தேன்மொழி போனை எடுத்து, "சொல்லு ஆரா..." என்றாள்.
"தேன்மொழி பாட்டி இல்லை தோட்டத்துக்கு போயிருக்காங்க. நீ கொஞ்சம் வரையா..."என்று ஆராதனா அழைக்க,
"ஆரா வீட்டுக்கு போனா போற வழியில ரஞ்சித்தை பார்க்கலாம்..."என்று மனதிற்குள் நினைத்து சந்தோஷத்தில் வேகமாக, "வரேன் ஆரா..."என கூறி போனை வைத்தாள்.
போனை வைத்து வேகமாக எழ, "எங்கடி போற இவ்வளோ அவரசமா..."என்று அருகில் அமர்ந்திருந்த வள்ளி பாட்டி கேட்டார்.
"அதுவா உங்க பேரனை பார்க்க பார்த்து ரொம்ப நாளாச்சி அதான்..."என்று தேன்மொழி உண்மையை கூற, "போடி உன் விளையாட்டுக்கு அளவே இல்ல..."என்றார் மரகதவள்ளி பாட்டி.
தன் உண்மையை கூறியும் நம்பாத பாட்டியை பார்த்து சிரித்தவாறு, "ஆரா வீட்டுக்கு போறேன் பாட்டி..."என கூறியவாறு வாசல் படி நோக்கிச் செல்ல,
"ஏன்டி முன் வாசல் வழியா போன பக்கம்தானே எதுக்கு பின்வாசல் வழியா போற வயக்காட்டு எல்லாம் சுத்தி போகணும்ல..."
"நான் எப்படி போன உங்களுக்கு என்ன பாட்டி..."என கூறியவாறு வெளியே சென்றாள்.
வயலில் வேலை செய்து முடித்து வீட்டிற்கு அனைவரும் செல்ல தான் மட்டும் தனியாக செல்வதால்,
"ஏ..!சம்பா நாத்து ..சாரகாத்து
மச்சான் சில்லுனு தான் வீசுதுங்க,அங்கம் பூரா
மச்சான் சில்லுனு தான் வீசுதுங்க,அங்கம் பூரா
......
ஏ ..!பொண்ணு வாசம் ...பூவு வாசம்
சென்ட் -உ பூசிக்கலாம் கட்டிக்கலாம் காலம் பூரா
VOCÊ ESTÁ LENDO
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Não Ficçãoஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.