அத்தியாயம் 34

2.4K 174 179
                                    

ஆராதனா மொபைலில் வந்த செய்தியை கேட்டு மயங்கி விழுவதை கண்ட அனைவரும் அவள் அருகில் ஓடி வர ஹலோ ஹலோ என்று மொபைலில் ஒலித்த குரலில் அதனை எடுத்தார் வாசுதேவன்.

"ஹலோ சொல்லுங்க மேடம்..."

"சார் நான் ஜி.ஹைச்ல இருந்து பேசுறேன். இந்த போன் வச்சிருக்கிறவங்களுக்கு அக்சிடென்டாகிருச்சி. லாஸ்ட் கால் உங்க நம்பர் தான் இருந்தது அதான் கால் பண்ணுனோம் இட்ஸ் எமெர்ஜென்சி சீக்கிரம் வாங்க சார்..."என்று கூறிய அந்த பெண்மணி போனை வைத்தார்.

யாரு நம்பர் என்று யோசித்தவாறு போனை பார்க்க அதில் சக்தியின் பெயர் இருப்பதை கண்டவர் நம்ம சக்தியா இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்க அதற்குள் ஆராதனாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க எழுந்தாள்.

"ஐயோ சக்திதிதிதி...! அப்பா வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்..."என்று பதட்டத்துடன் கூற,

"இந்த நைட் நேரம் நீ எதுக்கும்மா அங்கே நாங்க போறோம் போய் போன் பண்ணுறோம்..."என கூறியவாறு வெங்கடாச்சலமும்,வாசுதேவனும் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அழுகையுடன் தன் அறைக்குள் சென்ற ஆராதனா, "அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது சக்தியை என்கிட்டே இருந்து பிரிச்சிராதே. அவன் இல்லாம என்னால இருக்க முடியாது அவன் தான் என்னோட உயிர். அவனுக்கு ஏதாவதுன்னு என்னால தாங்க முடியாது.

எனக்கு ஒரு சின்ன அடிபட்டதுக்கே அன்னைக்கு அப்படியே துடிச்சிட்டு இன்னிக்கு இவ்வளோ பெரிய வலிய கொடுத்திட்டையே சக்தி. நீ அங்கே உயிர்க்கு போராடிக்கிட்டு இருக்கே ஆனா நான் உன் பக்கத்துல இல்லாம இங்கே இருக்கேன். நான் உயிரோட இருக்குற வரைக்கும் உனக்கும் எதுவும் ஆகாது. உனக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது..."என்று இரவு முழுவதும் தவிப்புடனும்,அழுகையுடனும் புலம்பி கொண்டிருந்தாள் ஆராதனா.

விடியற்காலை தேன்மொழியின் வீட்டுக்கு சக்தியை பற்றிய செய்தி செல்ல தேன்மொழி,தமிழரசு இருவரும் மருத்துவமனை கிளம்ப சக்திக்கு நடந்ததை அறிந்த வேல்முருகன் நேராக சென்றது மருதுவின் வீட்டுக்கு தான்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ