மனித உலகத்தில் இருந்து ரொம்ப மாறுபட்ட ஒரு உலகம் உண்டு.
"அதுதான் தேவதைகள் உலகம்."
இந்தக் கதையும் அந்த உலகத்தை பற்றியதுதான்.எங்கள் உலகத்தினுடைய தலையெழுத்தே அடங்கியிருப்பது ஒரு மந்திரவாளில் தான்.
என்னுடைய வாழ்க்கையே மாற இது ஒரு காரணம்.
நான்தான் தேவதைகள் உலகத்தின் இளவரசி ஆர்யா.
திடீரென்று யாரோ வரும் ஒலி ஆர்யாவுக்கு கேட்டது.அம்மா! என்று கூறி ஓடி சென்றுக் கட்டி அணைத்துக் கொண்டாள் ஆர்யா.
"ஆர்யா செல்லம் உன்னோட தங்கச்சிய நம்ம நாட்டுல உள்ளவங்களுக்கு காண்பிக்க வேண்டும்!
சீக்கிரம் புறப்படு" என்று அன்பாக ஆணையிட்டார்.அதைக் கேட்ட ஆர்யா மெதுவாக சினுங்கிக் கொண்டாள்.
"அம்மா நம்மளோடத் தங்கச்சிய ஏன் மத்தவங்கக் கிட்டக் காண்பிக்க வேண்டும்?"
"நீங்க சாதாரணமானக் குழந்தைங்க இல்ல. இந்த நாட்டோட இளவரசிகள் புரிஞ்சுதா?!"
ஆர்யா தலையாட்டி ஆமோதித்தாள்.
"தலையாட்டினாயே என்னப் புரிந்தது?!"
என்று ஒரு கேள்வி பார்வையுடன் உற்றுப் பார்த்தார்."நான் இப்பொழுதே சென்று புறப்பட வேண்டும் என்று புரிந்தது."
"நான் உனக்காக ஒரு necklace கொண்டு வந்திருக்கிறேன். திரும்பி நில் போட்டு விடுகிறேன்."
YOU ARE READING
காதலால் கைது செய்
Fantasyஆர்யா தேவதை உலகத்தின் இளவரசி. தன்னுடைய தாய் தாந்தையரைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறாள். "ஆனால் அதன் நடுவேக் காதல் வந்தால் என்ன செய்வாள்?!"