இந்த கதை ஒரு பெண்ணின் ஆழ்மனதில் இருக்கும் நிகழ்வுகள் மற்றும் உணர்ச்சிகள்.பெண்களுக்கு ஆசை அதிகம்.அவர்கள் தங்கள் ஆசைகளை உள்ளுக்குள்ளே வைத்துக்கொள்வார்கள்.அதைபோல் கஷ்டத்தை பிறரிடம் சீக்கிரத்தில் மனம் விட்டு பேசமாட்டார்கள்...
நம் கதையின் நாயகி "ஜிநியா".இவளுக்கு இரண்டு தங்கைகள்.அம்மா ஆசிரியர்.அப்பா விவசாயி.நடுவகுப்பு குடும்பத்தினர்.ஜிநியா கடுங்கோபக்காரி, சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபப்படுவாள்.மனதளவில் குழந்தை போன்றவள்.
இளம்பருவத்தில் அனைவருக்கும் வருவது காதல். அதைப்போல் தான் இவளுக்கு 17 வயதில் ஒருவர் மேல் அளவு கடந்த அன்பு தன்னை அறியாமல் வைத்தாள்.அவளுக்கு இது காதலா இல்லை ஈர்ப்பா என குழப்பம் கொண்டால்.ஜிநியா தன்னுடைய காதலை அவனிடம் சொல்லவில்லை. இவள் தினமும் பள்ளிக்கு செல்லும் போது பேருந்து நிலையத்தில் பார்ப்பாள் அவனை....
நம் கதை நாயகன் ஜெசில்,இவனுக்கு ஒரு தங்கை,அம்மா வீட்டின் அரசி...அப்பா சொந்தமாக மருந்து கடை வைத்துள்ளார்.இவன் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறான்.இவன் வெகுளி,அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பான்.
ஜிநியா தினமும் ஜெசிலை பார்த்துக் கொண்டே போவாள். இவள் யாரிடமும் தன் காதலைப் பற்றிக் கூறியதே இல்லை,அவள் மனத்துக்குள் ஆயிரம் எண்ணங்கள் குழப்பங்கள்,பிறரிடம் தன் காதலை சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்களோ பேசமாட்டார்களோ என்று நினைத்தாள்.
ஜிநியா அப்பாவுக்கு சர்க்கரை நோய் உள்ளது.இவள் எப்போதும் தன் அப்பாவுக்கு ஜெசில் கடையில் தான் மருந்து வாங்குவாள்,ஆனால் அவளுக்கு தெரியாது இது தான் தன் காதலனின் கடை என்று. ஒரு நாள் மாலை வேலையில் தன் அப்பாவுக்கு மாத்திரை வாங்க சென்று இருந்தாள்,அப்போது அங்கு ஜெசில் உட்கார்ந்து இருந்தான்.இவள் அவனை பார்த்ததும் மனதுக்குள் சந்தோஷம்.புன்னகையுடன் இருந்தாள் தான் இருக்கும் இடம் மறந்து பார்த்துக் ீகாண்டு இருந்தாள். அவனும் அவளை பார்த்தான்.பின் சுய உணர்வுக்கு வந்தவள் ஜெசில் தந்தையிடம் மருந்து வாங்கிக் கொண்டு விரைவாகச் சென்றாள் விட்டிற்கு...பிறகு அவளுக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.அவ்வளவு ஆனந்தம். அவள் தினமும் பள்ளிக்கு செல்லும் போது ஜெசிலை பார்த்துக் கொண்டே போவாள்.அவன் ஒரு நாள் அவளை பார்த்தான்.அவனுக்கு இவளை எங்கயோ பார்த்து இருக்கிறோமே என்று நினைத்து பார்த்தான்.அவனுக்கு அவளுடைய கண்கள் மிகவும் கவர்ந்தது.ஜிநியாவை பார்க்க ஆரம்பித்தான்.அவன் பார்ப்பது இவளுக்கு தெரியாது.அவள் தன் நண்பர்களிடம் ஜிநியாவை பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.நண்பர்கள் எல்லாரும் " நீ அவளிடம் உன்னுடயை காதலை அவளிடம் சொல்லி விடு " என்றார்கள்.ஜெசில்,அவள் கடைக்கு வரும் போதெல்லாம் அவளிடம் பேச முயற்சி செய்தான்.நாட்கள் கடந்தது.இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.இருவர்குள்ளேயும் காதல் இருந்தது.ஆனால் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள்.ஒரு நாள் ஜெசில்,ஜிநியாவிடம் தனியாக பேச வேண்டும் என்றான்.இவளும் சென்றாள்.அவன் அவளை பார்த்து நான் உன்னை காதலிக்கறேன் என்றாள்.இவளுள் எழுந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.ஆனால் அவனிடம் கோபப்பட்டு, "எனக்கு இதுலாம் பிடிக்காது "என்று சொல்லி விட்டு புறப்பட்டாள்.அவன் மனம் உடைந்து போனான்.
இவளுக்கு அன்று என்ன பண்வததென்றே தெரியவில்லை.ஒரே குழப்பமாக இருந்தது.ஒரு பக்கம் மனதில் மிகுந்த சந்தோஷம்.மறு பக்கம் பயம், வீட்டு சூழ்நிலைகள்,மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்றெல்லாம் பல யோசனைகள்.மறு நாள் அவள் பள்ளிக்குச் செல்லும்போது அவனை பார்த்தாள்.ஜெசிலும் அவளை பார்த்தான்.அவளுடைய அழகிய கண்களை பார்த்தான்.அவளை பார்க்க பார்க்க காதல் அதிகரித்தது.இப்படியே நாட்கள் கடந்தன...
அவள் தன் 12ஆம் வகுப்பை முடித்தாள்.அப்போது விடுமுறையில் இருந்தாள்.ஜெசிலின் எண்ணங்கள் அதிகமாய் இருந்தது.பள்ளி படிக்கும் போது தினமும் பார்ப்பாள்.வீட்டில் இருப்பதால் அவனை பார்க்க முடியவில்லை.ஜெசில் இவளை பார்க்க அவள் வீட்டு பக்கம் வருவான்.ஆனால் அவளுக்கு அது தெரியாது.
ஜிநியாவுக்கு மிகவும் நெருங்கிய தோழன் ஒருவன் இருந்தான்.அவன் பெயர் ஆலன்.ஜிநியாவும் ஆலனும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.ஒரு நாள் ஜிநியா ஆலனுக்கு தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தாள்.ஆலனும் ஜெசிலும் ஒரே தெரு.ஆலன் பேசிக் கொண்டு இருந்த போது ஜெசில் பக்கத்தில் இருந்தான்.
ஆலன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தான்.ஜெசில் ஆலன் யாரிடம் பேசினான் என்று கேட்ட போது, அது ஜிநியா என்று தெரிந்த போது ஜிநியா மீதுள்ள தன் காதலை பற்றி சொன்னான்.ஆலன் ஜிநியா வின் போன் நம்பரை கொடுத்தான்.ஜெசில் அன்றிரவு ஒரு 7 மணிக்கு ஜிநியாவுக்கு கால் செய்தான்.ஜிநியா போன் எடுத்து ஹலோ யார் என்றாள்.ஜெசில் என்று தொடங்கிய பேச்சு தொடர்ந்தது.இருவரும் பேச ஆரம்பித்தனர்.அவன் மேல் காதல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.ஆனால் அவள் ஜெசிலிடம் தன் காதலை சொல்லவில்லை.
ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஜெசில் கேட்டான்.ஜிநியாவிடம் "நான் உன்னை உண்மையாக நேசிக்கிறேன்,உனக்கு ஏன் என்மேல் காதல் வரவில்லையா" என்றான்.அவள் மௌனமாக இருந்தாள்.சிறிது நேரம் கழித்து,"என் வீட்டில் வந்து கேளு.அவர்கள் சம்மதித்தால் நான் உன்னை திருமணம் செய்கிறேன்" என்றாள்.உடனே அவன் " அப்ப உனக்கு என் மேல பாசம்,அன்பு,காதல் எதும் இல்லையா " என்று கூறி விட்டு கோபமாக போய்விட்டான்.ஜிநியா இரவு முழுவதும் அழுதுக்கொண்டே இருப்பாள் தினமும்.ஜெசில் மிகுந்த வேதனையுடன் இருந்தான்.அவளிடம் பேசுவதே இல்லை.ஜிநியாவால் அவனை மறக்கமுடியவில்லை.நாட்கள் கடந்தன.
ஜிநியா கல்லூரியில் சேர்ந்தாள்.திடீரென்று ஜெசில் கால் பண்ணினான்.இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.திரும்பவும் இருவரும் பேச ஆரம்பித்தனர்.ஜெசில் அவளை கேளி செய்து கொண்டே இருப்பான்.அவன் அடிக்கடி ஜிநியாவிடம் சொல்வான் "பொண்ணுங்க லவ் மட்டும் பண்ணமாட்டிங்க,ஆனா டைம்பாஸ்க்கு எங்கள போல பசங்கள ஏமாத்துரிங்க".அவளுக்கு மிகுந்த வேதனை.அவளால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.தினமும் அழுதுக்கொண்டே இருப்பாள்.
ஜெசில் வேறு ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தான்.அந்த செய்தி கேட்டதும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.அவள் கண்கள் இரண்டும் இரத்தக் குளமாக மாறியது.அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.தினமும் அவனை நினைத்து நினைத்து மெழுகுவர்த்திப் போல் உருகிக் கொண்டிருந்தாள்.
காலங்கள் கடந்து போனது.
ஜெசில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டான்.அவன் சந்தோஷமாக தன் வாழ்க்கையை தொடங்கினான்.அவன் ஜிநியாவை மறந்து போய்விட்டான்.ஜிநியாவுக்கு திருமணம் செய்துக் கொள்ளவில்லை.அவளால் ஜெசிலை மறக்க முடியவில்லை.அவள் தன் பெற்றோரிடம் தனக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லை என்று கூறி விட்டாள். அவர்களும் ஒன்றும் சொல்லவில்லை.இப்படியே ஜினியா தனியாக வாழ்ந்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக ஜெசிலை சந்திக்க நேர்ந்தது.இருவரும் பேசினார்கள்.அப்போது ஜெசிலுக்கு ஜிநியா திருமணம் செய்யாததை அறிந்தான்.ஜநியாவிற்கு அவனை பார்த்ததும் அழுகை வந்தது.தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் பேசினாள்.வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.ஜெசில் தன் மனைவியுடன் வந்திருந்தான்.அவள் அவனை தினமும் நினைத்து வாழ்ந்தாள்.........
எண்ணங்கள்.,
அஜி
YOU ARE READING
பெண்ணின் மனம்
Romanceமிகவும் ஆழமானது பெண்ணின் மனம்...... ஆழ்கடலில் முத்து எடுப்பது போல் எல்லோராலும் எடுக்க முடியாது.....