அத்தியாயம் 1 (edited)

1.9K 40 16
                                    

ரிதிம்மா!நீ அந்த பல்கலைக்கழகத்தில் சேரத்தான் வேணுமா? போலீஸ் உன் அண்ணனை தேடிக்கிட்டு தான் இருக்காங்க!நீ அங்கே சேர வேண்டிய அவசியமென்ன?"

கிளம்புவதற்கு தயாராக பெட்டியில் தன் உடைமைகளை அடுக்கியபடி இருந்த த்ரிதி தாயின் வார்த்தைகளைக் கேட்டு கோபமுற்றாள்.

"ஆமாம் மூணு வருஷமா இதத்தான் சொல்லிட்டு இருக்காங்க...ஆனால் இதுவரை அண்ணனைப் பத்தி ஒரு விவரமும் கிடைக்கல...அவன் காணாமல் போன போது அந்த பல்கலைக்கழகத்தில்தான் லெக்சரராக இருந்தான்.அதனால் அவனைப் பத்தி தெரிஞ்சுக்க நான் அங்கே சேரத்தான் வேணும்.தயவுசெஞ்சு என்னைத் தடுக்காதீங்க அம்மா"என்றாள் கலங்கிய குரலில்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள் வாழ்வு பூத்துக் குலுங்கும் நந்தவனமாகத்தான் இருந்தது.கலக்டேரேட் ஆபிஸில் பெரிய வேலையில் இருந்தார் சீனிவாசன்.அவர் மனைவி சகுந்தலா இல்லத்தரசி.ஆஸ்திக்கு மகன் நவீனும் ஆசைக்கு மகள் த்ரிதி இருவரும் அவர்களின் கண்ணின் கருமணிகளாக இருந்தனர்.

சிறுவயதில் இருந்தே நவீன் சரித்திர பாடத்தில் விருப்பமாக இருந்தான்.இளங்கலையில் சரித்திரமும் முதுகலையில் தொல்பொருள் ஆராய்ச்சியும் படித்த நவீன் தான் படித்த அதே பல்கலைக்கழகத்தில் லெக்சரராக சேர்ந்தான்.வேலையில் சேர்ந்த ஒரு வருடம் எந்த தொந்தரவும் இல்லை.ஆனால் வருடத்தின் கடைசியில் தொல்பொருள் ஆய்வுக்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியூர் சென்ற நவீன் திரும்பி வரவேயில்லை.பல்கலைகழகமும் அவன் வீட்டாரும் நண்பர்களும் கவலையில் ஆழ்த்தனர்.இந்த மூன்று ஆண்டுகளாக அவனைத் தேடியும் எந்த தகவலும் இல்லை.அதனால் தானே அவனைத் தேட முடிவெடுத்த த்ரிதி அவன் காணாமல்போன அதே பல்கலைக்கழகத்தில் சேர முடிவெடுத்தாள்.

"நீ சொல்றதெல்லாம் சரிதான் ரிதிம்மா.ஆனால் ஒரே மகனை பறிக்கொடுத்த அதே இடத்துக்கு உன்னையும் அனுப்ப தாய் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது, உனக்கும் ஏதாவது ஆகிட்டா என்னால் அதை தாங்க முடியாது கண்ணம்மா!"

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 03, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

மனதின் வார்த்தை சொல்லவா!Where stories live. Discover now