மீண்டு வா மனமே..part. 1

48 4 1
                                    

நல்ல மழை....
பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்...மழையை ரசித்திபடியே பயணிக்கிறாள் பிரியா....

குளிர்ந்த காற்றும்...
பொழிந்த மழையும் அவளின்
கவலையின் சிறு இடைவேளையாக மட்டுமே இருந்தது...,

அப்படி என்ன துயரம் அவளுக்கு...?
சற்று
பின்னோக்கி பார்ப்போம்....,

அது இணையம் என்ற...
ஒன்றே அறியாத காலம்...,தகவல் தொடர்பு என்பது முன்று நாட்களுக்கு பிறகு வந்தடையும் கடிதம் தான்...,

பெண்களுக்கு கல்வி என்பதில் முக்கியத்துவம் அந்த காலகட்டத்தில் பெரிதும் இல்லை...,இருந்தும் அவளது பிடிவாதம் பள்ளிபருவத்தை கடந்து கல்லூரி வரை செல்ல தன் பெற்றோரிடம் அனுமதி வாங்கியது...,

கல்லூரி பருவத்தில் பெரிதும்...காதல் வசப்படுவது இயல்பாக இருக்கலாம்...
காதல் தான் பிரியாவின் கவலையாக இருக்குமோ....? என்ற எண்ணம் வேண்டாம்..., அதை கடந்து ஒரு புனிதமான உறவு உள்ளது...

❤நட்பு❤

இரண்டாம் ஆண்டு கலைக் கல்லூரி படித்த போது...
அறிமுகமான நண்பன் தான் ரஞ்சித்....

"ஹாய் ஹலோ ...
பெண் தருகிறீர்களா...?
எழுதிவிட்டு தருகிறேன் "

(இதான் அவர்களது முதல் உரையாடல்...,)

ஆண்களிடம் பேசவே தயங்கும் பெண்
பிரியா...,
கேட்டவுடன் எடுத்து கொடுத்து விட்டு திரும்பிக்கொண்டாள்...,

ரஞ்சித் எழுதியவுடன்...,
பேனாவை பிரியாவிடம் கொடுக்க...,
அவளை அழைத்தான்...
ஆனால் அவளோ..,திரும்பி பெறுகையில் அவனிடம் பேச நேரிடுமோ என்று நினைத்து...
பேனா வேண்டுமா..? வேண்டாமா என்று தனக்குள்ளே கேட்டு கேட்டு பதிலளித்தாள்....

ரஞ்சித் மறுபடியும்...
பிரியா பிரியா...
இந்தாங்க உங்க பேனா என்று
அழைக்க...,

அவள் வேறு வழியின்றி...
திரும்பி வாங்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாள்...

அவசர உதவிக்கு பேனாவை...கொடுத்தாள் நன்றி கூறுவதற்க்குள் ஓடி விட்டாளே..
நாளை காலையில்...
கல்லூரி வந்தவுடன் நன்றியை கூறிவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு சென்றான் ரஞ்சித்..

#மீண்டும் வரும்
காத்திருங்கள்...!


மீண்டு வா மனமே...⚘⚘⚘Wo Geschichten leben. Entdecke jetzt