தன்னுயிரை சரிபாதியென
பகுத்து பைத் திங்கள்
பனிகுடம் தனில் சுமையென
கருதாது இமைக் காத்திடும்
கண்ணென எனைக் காத்து
பெற்று எடுத்தாள்......தன் மயிரிழையின் கூச்சத்தால்
என்னுறக்கம் களையுமோ
என்று ராவினில் தன்னுறக்கம் தொலைத்தவள்....தொலைதூர நிலவைக் காட்டி
கை எட்டும் தூரம் தான் எட்டிப்
பிடித்து வா விளையாடலாம்
என்று சொல்லியே உணவின்
கூடவே ஊக்கமதையும் ஊட்டி வளர்த்தவள்......