வைஷ்ணவி வழக்கம் போல் பரபரப்பாகஅலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டுஇருந்தாள்.அன்று திங்கள் கிழமை என்பதால்அவள் வேலையில் மூழ்கிக் கிடந்தாள் .கதவுதட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.
"மேடம்..."
'சொல்லுங்க சுரேஷ்."
"உங்கள் டீம் இல் புதுசாக சேர ஒருத்தர் வந்துஇருகாரு.அனுப்பட்டுமா?'
"ஒரு 5 நிமிடம் கழித்து அனுப்புங்க சுரேஷ்" என்று சொன்னவள் மீண்டும் வேலையில்மூழ்கினாள்.
5 நிமிடம் கழித்து கதவு மீண்டும் தட்டப்பட்டது .
"உள்ளே வரலாம்" என்று சொன்னவள் வந்தஇளைஞனை பார்க்காமல் தன் கணினியில்ஏதோ பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"ஹாய்! ஐ ஆம் கெளதம் " என்ற சத்தம் கேட்டுநிமிர்ந்தாள்.
ஒரு அழகான இளைஞன் வெள்ளை சட்டையும்நீல நிற பேண்ட்டும் அணிந்து இருந்தான்.
"ஹாய்! கெளதம்.உட்காருங்க."
"நன்றி மிஸ் வைஷ்ணவி" என்று கூறி அவன்உக்காந்து கொண்டான்.
அவள் பேச வாய் எடுப்பதற்கு முன்னரே அவன்பேச ஆரம்பித்தான்.
"நான் இந்த வேலைக்கு புதுசு இல்லை.எனக்குநிறைய அனுபவம் இருக்கு. என்னை யாரும்அதிகாரம் செய்தால் எனக்கு பிடிக்காது. என்னவேலை செய்ய வேண்டும் என்று சொன்னால்போதும் ,நான் அதை சுதந்திரமாக செய்துமுடித்து விடுவேன் ."
"அப்புறம் ஒரு விஷயம், உங்களை பேர் சொல்லிதான் கூப்பிடுவேன் .மேடம் என்று எல்லாம்கூப்பிட மாட்டேன் .சரி நான் என் அறைக்குபோறேன் .உங்களை நாளை சந்திக்குறேன் என்று கூறி வெளியேறினான்."
வைஷ்ணவி திகைப்பாய் பார்த்தாள் .எந்த ஒருபயமும் இல்லாமல் வேலைக்கு வந்த முதல்நாளே இவ்வளவு திமிராகபேசுகிறானே.இவனை முதலில் வேலையில்இருந்து நீக்க வேண்டும் என்று எண்ணி தன் மேல்-அதிகாரிக்கு போன் செய்து நடந்ததைகூறினாள்.
"தப்பா நினைக்காதே வைஷ்ணவி.அவன் நம்முதலாளியின் சிபாரிசில் வந்தவள்.மூணு மாசம்தான் இருப்பான்.அதுவரை அவனை நாம்பொருத்துக் கொள்ள வேண்டும்.அது மட்டும்இல்லை, அவனுக்கு ஒரு வாரத்துக்கு ட்ரைனிங்கொடுக்கும் பொறுப்பும் உனக்கு இருக்கு" என்றுகூறினார்.
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம்
Romanceஅலுவலகத்தில் எதிரியாக நினைத்தவனை காதலிக்க துவங்குகிறாள் வைஷ்ணவி.அவள் காதல் கை கூடுமா??