நீ பேசிய வார்த்தைகள் போதுமடி

567 10 1
                                    

(ஏழூர் : பூதலூர்,சோலையூர்,கோதையூர், வெற்றியூர், கண்டையூர்,புன்னையூர், விளம்பியூர்)

பூதலூர்

"அங்க என்ன பண்ணுதவ, இந்த செரட்ட கோணியை கிணத்து பக்க பாதையில கொண்டு போளா", என மீசைக்காரர் அங்கு வஸ்திரத்தை தோளில் போட்டு மிரட்டு தோணி மாறாமல் நின்றார், பட்டாளத்தான் அல்லவா...

"செங்கா! வந்து வண்டிய கட்டுள", என அவர் வயலில் இருந்து நடையை கட்ட, அதற்குள்..
"மீசைக்காரரே! இந்தாரும்மையா கொஞ்ச நாளி நில்லுதவ", என கோவில் தர்மகர்த்தா அவரின் செல்லத்தை திறந்து வெற்றிலையை எடுத்தார்.
"என்ன? காளை இந்த பக்கம் என்ன ஜோல்லி", மீசைக்காரர் அவர் பல வருடம் வளர்த்த மீசையை முறுக்கினார்.

தர்மகர்த்தா தனது உண்மையான பெயரை கேட்டதும் தொண்டையை செறுமினார். பின்னர் வந்த வேலையைத் தொடங்கினார்.
"உமக்கு தெரியாத சங்கதி இல்ல, மீசைக்காரரே, எல்லாம் நம்ம கோவில் விசயமா தான் வேற பேச எமக்கு என்ன இருக்கு சொல்லுவோய்".
மீசைக்காரர், "அதுக்கு என்ன செய்றதுவோய் இம்புட்டு காலமா நடக்காத சங்கதி, ஏதோ ஊருக்குள்ள ஆத்தா நம்பிக்கை போவ கூடாதுனு அந்த கோவில் வெறும் காலை சாம்ம பூசை நடத்துறோம், நீர் என்னவோய் திருவிழா நடத்தனும் கேக்குறீர்!", என அங்குவஸ்திரத்தை வண்டிக்காரன் செங்காவிடம் கொடுத்தார்.
"ஏரும்மையா, இப்படி சொல்லிட்டீரு, ஆத்தா ஏதோ நம்ம செய்யுற இந்த ரெண்டு நாளி பூசனைக்கு தான் நம்மள இன்னாள் வரைக்கும் காக்குறது, உம்ம வயல் உம்ம தோப்பு என எல்லாத்துக்கும் ஆத்தா தான் துணை நிக்குறா, நீர் அன்னைக்கி பெரியம்பளைங்க கிட்ட பேசுனீரு அதுனால தான் இந்த ரெண்டு வேளை பூசனை நடக்குது. உம்ம வார்த்தைக்கு திருவிழாவும் நடக்கும் ஒரு வார்த்தை சொல்லிபாரும்மையா", கும்மிட்டு கிளம்பினார்.

வண்டியில் பயணிக்க, அவருக்கு தர்மகர்த்தா சொன்ன வார்த்தைகள் மனதில் ஓடின. "ஐயா! மன்னிக்கனும், நம்ம கோவில் நிலவரம் தர்மகர்த்தாக்கு தெரியாத விஷயமா, ஏன் அவர் திருவிழா நடத்தியே ஆகனும் இவ்ளோ முயற்சி செய்யுறாரு", என செங்கா கேட்க, மீசைக்காரர் ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார்.
கோவிலுக்கு போகும் வழி வந்தது.
"ஐயா! வழக்கம் போல சுத்தி போகவா?", என கேட்டான்.
"வேணாம் நீ நேரா போ செங்கா" என கையை அசைத்தார். ஒன்றும் விளங்காமல் வண்டியை செலுத்தினான்.
கோவில் மிகவும் புதுமையாக பழமை மனமும் மாறாமல் இருந்தது.
அமைதியாக இருக்கும் பெண்ணின் மனதில் போர்களம் நடப்பது போல தான் இந்த கோவிலும்...அதற்குள் அத்துனை மர்மங்களை அடக்கி இருந்தாலும் வெளியே கருணை கடலாக காட்சியளித்தது.

நீ பேசிய வார்த்தைகள் போதுமடிWhere stories live. Discover now