சமூக சீரழிவுக்கு டிக் டோக் - Tik Tok Review

68 1 0
                                    


சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Review

மக்களின் சமூக வலைதள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பொழுதுபோக்கிற்கு என்று ஆரம்பித்து இப்பொழுது அதற்கே அடிமை ஆகி கிடக்கிறோம். பேஸ் புக், இன்ஸ்டாகிராமிற்கு பிறகு இப்பொழுது நம்மை கட்டிப்போட்டிருப்பது டிக் டாக்.

திரைப்படங்களில் வரும் பிரபலமான வசனங்களையும் பாடல்களையும் ஒத்திசைத்து நடித்து 60 வினாடி வீடியோவாக ஷேர் செய்து மகிழ்வதோடு டிக் டாக் நின்றுவிடுவதில்லை. நம் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவிற்கு நாம் துளியும் எதிர்பார்க்காத பல விளைவுகளை அது விளைவிக்கக்கூடும்.

டிக் டாக் ஆப்-ஐ ஒருவர் பதிவிறக்கம் செய்தவுடன் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை உருவாக்காமலேயே மற்றவர்களின் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். தனக்கென ஒரு அக்கவுண்ட்டை தொடங்கியதும் மற்றவர்களின் வீடியோக்களை லைக், ஷேர் செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பவும் முடியும்.

உளவியல் ரீதியாகவே இள வயதினரில் நான்கில் மூன்று பேருக்கு சமூகத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லைக் மற்றும் ஷேர்- இற்கு ஆசைப்பட்டு தங்களுக்கு முன் பின் தெரியாதவர்கள் இன்பாக்சில் மெசேஜ் செய்யும்போது அதை ஒரு உரையாடலாக எடுத்து செல்வர்.

தங்களது பர்சனல் வாழ்க்கை பற்றி பகிர்வதில் தொடங்கி அந்தரங்க விஷயங்கள் வரை அந்த உரையாடல் எங்கெங்கோ போகும். அதை எதிர்புறத்தில் பேசிக்கொண்டிருக்கும் நபர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி எவரும் யோசிப்பதில்லை. பண திருட்டில் தொடங்கி உடல் முறைகேடு வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Review

பெண்கள் சிலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஆபாசமாக உடைகள் அணிந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து பகிர்வது வழக்கமாகி வருகிறது. இது அவற்றை பார்க்கும் ஆண்கள் மட்டும் அல்லாது குழந்தைகள் மத்தியிலும் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.

தங்களது குழந்தைகள் டிக் டாக்-ஐ உபயோகிப்பது தெரிந்தால் பெற்றோர்கள் கவனமாக இருப்பது முக்கியம். அது போல பெண்களும் நேர்த்தியான முறையில் தங்களை காண்பித்துக்கொள்வதும் முக்கியம். இல்லையேல் அது பல விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பல கதைகளில் ஒரு கதை!

வியாசர்பாடியை சேர்ந்த கலையரசன் (24) என்பவர் பெண் வேடமிட்டு டிக் டாக் வீடியோக்கள் செய்து பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். அதை பார்த்த அவரது நண்பர்களும் டிக் டாக் பயனர்கள் சிலரும் அவரை திருநங்கை, அலி என்று கிண்டலடித்து அவரது மனம் புண்படும்படி விமர்சித்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வாறான கேலி கிண்டல்களை பொறுத்து கொள்ள முடியாமல் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் பதிவிட்டிருந்த கடைசி டிக் டாக் வீடியோவில் "மற்றவர்களின் கேலி கிண்டலால் நான் பயப்பட போவதில்லை. ஆண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய பல டிக் டாக் வீடியோக்களையும் நான் பகிர்ந்திருக்கிறேன்.

அப்படி இருக்கையில் ஏன் நான் அவ்வப்போது பெண் வேடமிட்டு வீடியோக்கள் வெளியிட்டால் மட்டும் இரக்கமே இல்லாமல் என்னை புண்படுத்துகிறீர்கள்?! என்று கூறியிருந்தார்.

சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Review

அவரது உறவினர்களிடம் இது பற்றி விசாரித்தபோது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சில நாட்களாகவே டிக் டாக் கேலி கிண்டல்களினால் அவர் மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்டதாக கூறினார்.

இது போன்று பொழுதுபோக்கிற்காக தொடங்கி; நாள் ஆகா நாள் ஆகா அதற்கே அடிமையாகி; தங்களது வாழ்க்கையை ஏதோ ஒரு வழியில் தொலைத்தவர்களின் கதைகள் பல. சமூக வலைத்தளங்களை தாண்டி வெளியில் ஒரு உலகம் இருக்கிறது.

ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பையும் நம்பிக்கையையும் சுமந்து கொண்டு குடும்பங்கள் இருக்கின்றன. ஒருவரின் திறமையையும் பிரபலத்தன்மையையும் சமூக வலைதள பின்பற்று எண்கள் என்றைக்கும் முடிவு செய்துவிட முடியாது என்பதை இன்றைய இளைய தலைமுறை கட்டாயமாக உணர வேண்டிய காலம் இது.

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 09, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

சமூக சீரழிவுக்கு டிக் டோக் - Tik Tok ReviewWhere stories live. Discover now