உன்னாலே தெளிவானேன்....

115 12 25
                                    

நவம்பர் 2014....

அந்த வருஷம் தான் நீ என்கிட்ட வந்து....உன்னோட வாழ்க்கையில ஒரு முக்கியமான இடத்தை பிடிக்க போறேன்னு சொன்ன.....

முதல்ல உன் மேல....எனக்கு விருப்பமே இல்ல தான்....ஆனா வேற வழி இல்லை னு நானும் உன்னை ஒத்துக்கிட்டேன்....

நீயும்  என் வாழ்க்கையில வந்த....கொஞ்ச மாசத்துலையே நீ என்னோட வாழ்க்கையில ....ஒரு முக்கியமான இடத்தை பிடிச்சிட்டியே.....ஆனா எப்படினு தெரியல....

எனக்கு ரொம்ப  பிடிச்ச கறுப்பு நிறத்தில் இருப்பதனாலா....

இல்ல எப்பவுமே என்கூடவே இருக்குறதுனாலையா னு தெரியல....

காலையில கண்விழிக்கும் போதிலிருந்து....நைட் தூங்க போகும் வரை.... நீ என்கூடவே தான் இருக்க....தூங்கும் போது மட்டும்....நான் உன்னைய என்னை விட்டு விலக்கிடுறேன்...

எங்க தூக்கத்துல புரண்டு படுக்கும் போது... உன்னைய காயப்படுத்திடுவேனோனு தான்....என்னை விட்டு அப்ப மட்டும்....உன்னைய விலக்கிடுறேன்....கோவிச்சுக்காதபா....

உன்னை என்கூட பாக்கும் போதெல்லாம்....என் friends எல்லாருமே என்னை கிண்டல் பண்ணுறாங்க....அதை எல்லாம் நான் காதுலையே வாங்கிக்க மாட்டேன்....அவங்களுக்கு எங்க தெரியபோகுது....நம்ம relationship பத்தி....

நீ என் கூட இருக்கும் போது....சிலர் மட்டும்... உன்னைய  பாத்து....you are sooo cool...னு சொல்லும் போது....வரும்பாரு ஒரு பீல்....அத சொல்ல வார்த்தையே இல்ல....என்னவன் னு ஒரு கர்வம்....ஒரு சந்தோஷம்....ப்ப்பா....செம பீல் தான்....

உன்னைய எப்பவுமே....என்னோட கண்ணுலையே வைச்சுக்கிட்டு இருக்கேன்....ஏன் உன்மேல அவ்வுளவு காதல்னு தெரியல....

கல்யாணத்துக்கு அப்புறம் வர காதல தான் நான் நம்பிட்டு இருந்தேன்....ஆனா எப்ப நீ என் வாழ்க்கையில வந்தியோ....அப்பவே அது மொத்தமா உடைய ஆரம்பிச்சுடுச்சு....

எனக்கு கல்யாணம் ஆனாலும்....உன் மீதுள்ள காதல் குறையாதுடா....என்னவனுக்கு முன்னாடி....எப்பவுமே நீ தான் எனக்கு முதல்....

நான் ஏன் உன் மேல இவ்வுளவு பைத்தியம் ஆனேன்னு இன்னுமே புரியல....

எனக்கு எல்லா விஷயத்தையும் ரொம்ப தெளிவா....அழகா காட்ட உன்னால மட்டும் தான் முடியும்....என்னோட வாழ்க்கையில நீ ரொம்பவே முக்கியமான இடத்தை பிடிச்சுட்ட....

நீ இல்லாம என்னால எதுவுமே இல்லைங்கற நிலைய எப்படி உன்னால உருவாக்க முடிஞ்சுது....பாவி....இப்ப பாரு நீ இல்லைனா....எனக்கு எதுவுமே இல்லை.....

சில சமயம் நீ தெரியாம கீழ விழுந்துட்டா....எனக்கு உயிரே போயிடும்.....

அதே மாதிரி உன்னைய என்னை தவற வேற யாரும் தொடுறது....என்ன பாக்குறது கூட எனக்கு பிடிக்கல.....

நீ இல்லைனா...என்னோட வாழ்க்கையில எதுவுமே தெளிவில்ல....னு உணர வைச்சுட்ட.....

என்னோட வாழ்க்கையில நீ வந்த பிறகு தான்.....எனக்கு எல்லாமே அழகாச்சு....

ரொம்ப நன்றிடா...

என்னோட sweet கண்ணாடி....i love you sooo much டா கண்ணாடி....

கண்ணாடி போடலைனா கண்ணு தெரியாதுங்கறத....எவ்வுளவு symbolic ஆ சொல்ல வேண்டியதா இருக்கு....சத்தியமா ஏன் இப்படி ஒரு போஸ்டுனு தெரியல....காலையில கண்ணாடி முன்னாடி நின்னு....என்னோட கள்வனை அணியும் போது தான்.... எனக்காக இவ்வுளவு பண்ணுறானே....இவனுக்காக....ஒரு போஸ்ட் போடகூடாதுனு தோனுச்சு....ஆதான் இது....சரியா

நோ...நோ பேட் வேர்ட்ஸ்....மீ பாவம்....பை...பை நட்புகளே....

உன்னாலே தெளிவானேன்...Where stories live. Discover now