அறிமுகம்
அருண் நமது கதாநாயகன்..
அவன் ஆறு அடி உயரம் கொண்டவன். அழகானவன். பெண்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை உடையவன்.அருண் காதலுக்காக தனது உயிரையே கொடுக்கும் அளவுக்கு நேசிக்கத் தெரிந்தவன். அவனுக்கு அன்பை கொடுக்கவும் தெரியும் .அதே சமயம் தன்னிடம் தகராறு செய்பவருக்கு அடியும் கொடுக்கத் தெரியும் ..அழகும் வீரமும் நிறைந்தவன்.
அவன் ஒரு முறை ஒருவரை வெறுத்து விட்டால் அவர்கள் பக்கமே போக மாட்டான்..
அவன் ரூபி என்ற பெண்ணை மனதாரக் காதலித்தான்.. ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகுதான் அவனுக்குத் தெரியவந்தது. ரூபி அவனைக் காதலிக்க வில்லை என்று..
ரூபி முதலில் அருணை விரும்பினாள். பிறகு அவனைவிட பணக்காரனான அவனது நண்பனைக் காதலிக்கிறேன் என்று அருணிடமே வந்து கூறினாள்.. அதனால் அருணுக்கு காதல் மீதும் பெண்கள் மீதும் நம்பிக்கை இழந்தது.
இனி வாழ்வில் யாரையும் காதலிக்கக் கூடாது என்று அவன் முடிவெடுத்திருந்தான்.
**""""***"""""""**
ரேகா நமது கதாநாயகி அவள் சஞ்சய் என்பவனை மனப்பூர்வமாகக் காதலித்தாள்.. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தனர்.ரேகா சஞ்சய் இன்றி வாழ முடியாது என்ற அளவிற்கு விரும்பினாள்.
ஆனால் சஞ்சய் அவளைப் பொழுது போக்கிற்காக காதலித்தான் என்பது அவளுக்கு தெரியாது. அவளை விட அழகான ஒரு பெண்ணைப் பார்த்ததும், நீ எனது தோழியாக இரு என்று அவளை விட்டுவிட்டு அந்தப் பெண்ணுடன் சஞ்சய் சென்றுவிட்டான்..
எனவே ரேகாவிற்கு காதல் என்றாலே போலி ..காதல் ஒரு பொய் என்று அதன் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாள்.
**"""*""""****
காதலில் தோற்ற நமது கதாநாயகன்
காதல் போலி என்று நினைக்கின்ற நமது கதாநாயகி இவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதல் கதையே இது.
YOU ARE READING
காதல் தோல்வி
Short Storyகாதலில் தோல்வியுற்ற இருவரின் புதிதாக மலரும் காதல் கதை. காதல் தோல்விக்கு பின்பும் வாழ்க்கை உண்டு. வாருங்கள் அவர்களுடன் இணைந்து பயணிப்போம்