திருமண நாள் தொட்டு
நின்னுடன் வாழ்ந்த
வாழ்கின்ற வாழ்வில்
என்னை நேசித்தாலும்
நிந்தித்தாலும் நித்தம்
நித்தம் காதல் செய்து
எனைக் கொல்கிறாய்!
சத்தமே இல்லாமல்
யுத்தங்கள் செய்து எனை
இம்சிக்கிறாய் கண்ணே!
கடந்த ஐந்தாண்டுகளாக
உன்னோடான வாழ்க்கை
தொடருகின்ற இறுதியில்
காதலோடே உன் மடியில்
எனதுயிரும் பிாியுமடா!