விநாயகன் வாழ்த்தணி

30 2 1
                                    

ஓ விநாயகா!

சுற்றியுள்ள  அண்டமெல்லாம்
பெற்றெடுத்த ஆதியாம் நீ;
ஒற்றைத் தந்தமே மிச்சமிருப்பினும் 
மற்றவர்கண்தீரா வல்வினை தீர்த்துவைப்பவன் நீ;
பத்தாயிரம் கோடித் தேவருக்கும்
பக்தகோடி யாவருக்கும்
நெற்றிக்கண் ணுடையானுன் ஐயனுக்கும்
முழுமுதற்கடவுளாம் நீ;

கடவுளாய் இருப்பதனாலே
பிறப்புமற்ற இறப்புமற்ற 
இருப்புக் கொண்டவனுமாம் நீ - யென்று 
பற்றுகொணர்ந்து போற்றிடும் ஆத்திகரே!

பிறவாதவனுக்குப் பிறந்தநாளொன்று முண்டோ;
பிடித்த பலகாரமு முண்டோ; நுன்கடவுளை
வாழ்த்தி வணங்கிப் பின் ஆழியில் முக்கிக் களித்திடுமுன் சாத்திரம்;
என்றென்றுமெனக்கு  விளங்க மறுக்கும் வினையே!

கடவுள் பக்தி இன்றியமையுமிப்
பகுத்தறிவாளனின் வாழ்த்தணியேற்பாயோ?!

நீரில் மூழ்கிடினும்
நீடூழி வாழ்வாய் எம் புத்த விநாயகா!



You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 22, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

விநாயகன் வாழ்த்தணிWhere stories live. Discover now