அன்பு 1

450 16 4
                                    

"கவுசல்யா
சுப்ரஜா  ராமா பூர்வ
சந்தியா ப்ரகஷுவதே "
என்று  வீட்டில்  சுப்ரபாதம்  பாட .. 

"ஏய்  தியா  எந்திரிம்மா  மணி  ஏழாகுது   இன்னும்  என்ன  தூக்கம் ? இப்படி தூங்கினா  போற  வீட்டுல  என்னைத் தான்   குறை  சொல்லுவாங்க,  அம்மாதான்   ஒழுங்கா வளர்க்கலைனு"   என்று சுதா  நம்ம நாயகியின்  அம்மா  தனியாக  சுப்ரபாதம்  பாடினார்.

அதை கேட்டப்படியே  எழுந்த  தியாவின்  நினைவுகள் பின்னோக்கி   சென்றது.

"ஏய் தியா  எந்திரிடி மணி  8  ஆகுது  இன்னும் என்ன தூக்கம், இப்ப எந்திரிக்க போறியா?  இல்லையா?"
என்று தியாவை உலுக்கிக் கொண்டிருந்தான் தயா.

"டேய் அண்ணா  ப்ளீஸ்  டா, இன்னிக்கு சண்டே தானே இன்னும் கொஞ்ச  நேரம் தூங்கிக்கிறேன்டா"  என்றாள்  தூக்கக் கலக்கத்தில்.

"அதலாம்   முடியவே  முடியாது  இப்ப  எந்திரிக்க போறியா?  இல்லையா? எல்லார்  வீட்டுலையும்  பசங்க தான்  10 மணி வரைக்கும்  தூங்குவாங்க,   இங்க எல்லாமே உல்ட்டாவா  இருக்குது, எல்லாம் என் தலை  எழுத்து எந்திரிடி  முதல, இல்லனா  தண்ணிய  கொண்டு வந்து மேலையே  ஊத்திடுவேன்"  என்று கத்தினான் தயா...

'இதுக்கலாம்  அசருபவளா நான்' என்று  தியா  மேலும்  போர்வையை  இழுத்து  தலை வரை போர்த்தினாள்.

இதை பார்த்த  தயாவிற்கு கோவம் வரவும்  "இவ்வளவு சொல்லியும் எந்திருக்க மாட்டிங்கிற இருடி  வரேன்" என்று பாத்ரூமிற்கு  சென்று  பாக்கெட் நிறைய  தண்ணீரை  எடுத்து  வந்தவன் கொஞ்சம் கூட பாவம் பார்க்காமல்   அவள்  மீது  ஊற்றினான்..

பதறி  எழுந்த  தியா , "அம்மா   அ... ம்...மா......"  என்று  கத்தினாள் 

"என்னடி  நான்   சும்மா சொன்னேன்னு  நெனச்சியா?, நான்  சொன்ன  செய்வேண்டி, எரும மாடு மாதிரி என்னடி 8மணி வரைக்கும் தூக்கம்", என்று தயா பழிப்பு காட்ட...

அவள் கத்திய  கத்தலில்  என்னவோ  ஏதோ  என்று  ஓடி  வந்த  சுதா, தியா நின்ற  கோலத்தைப்   பார்த்து  பதறிப் போய்...  "ஏன்டா தயா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா   இப்படியா பண்ணுவடா,  பாரு பெட் , பெட்சீட்  எல்லாம்  நனைஞ்சி   போயிடுச்சி,   இப்ப இத  காய வெக்க  நான் மொட்டமாடிக்கு  தூக்கிட்டு  போகணும், எல்லாம். எனக்கு வேலை வைக்கறதுக்கே இருங்க.. நீங்க ஒரு வேலை செஞ்சிடாதிங்க", என்றவர் ஒழுங்கா  இதல்லாம் எடுத்துட்டு  போய்  மேல காய  வைடா எரும" என்றார் சுதா..

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 14, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

புயலில் சிக்கிய பூவே..Where stories live. Discover now