நான் மீட்டிய ராகம் நீ - 1

582 7 0
                                    

வெளியே காலை நேரத்தின் ஆதிக்கமிருக்க உள்ளே இன்னும் உறங்கியபடியிருந்தது அந்த மாளிகை.....
அன்று ஞாயிறு என்பதால் சற்று தாமதமாகவே விழித்தெழுந்தது அந்த மாளிகை...
தோட்டம், நீச்சல் தடாகம், அவுட் ஹவுஸ், கார் நிறுத்த செட், நடைபயில  சிறு பாதைகள், மீன்கள் நிறைந்த தடாகம், ஜிம் என்று அனைத்தையும் தன்னுள் வசப்படுத்தியிருந்தது அந்த மாளிகையின் வெளிப்புறம்.

தோட்டத்தில் பல வகைப்பட்ட மரங்கள், செடிகள், கொடிகள் மட்டுமன்றி பறவைகளுக்கென்று ஒரு வேடந்தாங்கலும் அமைக்கப்பட்டிருந்தது.. இயற்கையின் செழிப்போடு சற்று செயற்கையும் சேர்க்கப்பட்டு மனதினை அமைதிப்படுத்துமிடமாய் இருந்தது அந்த தோட்டம்...
அதிலேயே மீன்களுக்கான உறைவிடமாய் இருந்தது அந்த தடாகம்... அதில் மீன்கள் மட்டுமல்லாது தாமரைகளும் வசித்தன... அந்த தோட்டத்திலிருந்து ஒற்றையடி பாதைபோல் அமைக்கப்பட்டிருந்த சிறு நடைபாதை மாளிகையை சுற்றி வட்டமிட்டிருந்தது...
அதோடு ஒரு ஓரமாய் அவுட் ஹவுசும்  அதிலிருந்து சற்று தள்ளி வாகனம் நிறுத்துவதற்கான செட்டும் இருந்தது... மாளிகையின் செல்வ செழிப்பிற்கு சற்றும் குறையாத விதத்தில் அங்கு ஐந்து கார்களும் பல மோட்டார் சைக்கிள் கலெக்சனும் அதோடு இரண்டு மவுண்டன் பைசிகளும் நின்றிருந்தது..
பின்புறமாய் நீச்சல் தடாகமும் ஜிம்மும் இருந்தது...

இவ்வாறு பிரம்மாண்டத்தின் உச்சமாயிருந்த அந்த மாளிகையை துயிலெழுப்பிக்கொண்டிருந்தாள் பைரவி.
பைரவி... அந்த மாளிகையின் மூத்த மருமகள். பார்ப்பவர்களை மதிமயங்கச்செய்யும் சாந்தமான அழகு. எவ்வளவு துன்பங்களிருந்த போதிலும் அதனை எப்போதும் வெளிக்காட்டாது புன்னகையை மட்டுமே ஏந்தியிருக்கும் அவளது வதனம்....
அதோடு கடந்த ஐந்து வருடங்களாக தொழில் ஈடுபட்டிருந்தமையால் ஒரு முதிர்ச்சியும் அந்த வதனத்தில் குடியேறியிருந்தது...  முகம் அமைதியாயிருந்த போதிலும் எப்போதுமே ஒளியிழந்து மங்கி கிடந்தன அவளது நயனங்கள்....
ஆனால் அதுவும் ஊன்றி கவனித்தாலன்றி தென்படாது... ஆனால் அந்த கண்களுக்கு எதிரிலிருப்பவரை ஊடுருவி ஆழம் அறியும் திறனும் உண்டு...  நிறமோ மாலை வேளை வெயிலின் நிறத்திலிருக்க அழகின் மொத்த உருவமாய் படைக்கப்பட்டவளுக்கு திருஷ்டிப்பொட்டாய் வலது புற நாடியில் வீற்றிருந்தது கருமை நிறத்தில் ஒரு மச்சம்.. ஆனால் அந்த அழகு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு கடமைக்காய் பேணப்பட்டது போலிருந்தது... ஆனால் அதற்கும் சில காரணங்கள் இருந்தன.....

நான் மீட்டிய ராகம் நீWhere stories live. Discover now