"உத்ரா!! இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க? காலேஜ் போக நேரமாகுது", என அவள் அம்மா துணியை காயப்போட்டு கொண்டே அவளை வெளியே அழைத்தார்.
உத்ரா சமையலறையில் அவளுக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து அடுக்கி வைக்க அவளுக்கும் ஆசை தான். என்ன செய்வது உடலை பேணி காக்கும் பெண்ணியரில் அவளும் அடங்கி உள்ளாள்.
"ஹாங்!!! சப்பாத்தி என் உடம்ப பார்த்துக்க நானே சமைச்சு சாப்பிட வேண்டியதா இருக்கு", என மனதில் புலம்பினாள்.
தன் தாயின் சத்தம் கேட்டு வேகமாக வெளியே தலையை காட்டினாள்.
"என்ன அம்மா என் காலேஜ் நேரம் அரை மணிநேரம் அதிகம் ஆகிடுச்சு இந்த வருஷத்துல இருந்து, நீ ஏன் எப்பவும் போல சத்தம் போடுற?", என காலை சப்பாத்தியை பாதி விழுங்கி கொண்டே பேசினாள்.
"எது எப்படி மாறுனா என்ன? நம்ம வேலையை வேளைக்கு சரியாக செய்யனும், உத்ரா", என மடித்த துணிகளை அவளிடம் நீட்டினார். "மீதம் இருக்குற துணியை காயப்போடுறேன்.
நீ விக்ரமும் பவியும் கிளம்பிடாங்களானு பாரு என்ன!", என சொல்லிவிட்டு திரும்பினார்.உத்ரா, சிட்னியாக மாறி கொண்டு இருக்கும் தூங்கா நகரின் சாதாரண வீட்டு பெண்.
தனியார் பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளம் அறிவியல் வேதியியல் படித்து கொண்டு இருக்கும் மாணவி.தங்கை பவித்ரா +2 படிக்கிறாள். தம்பி விக்ரம் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
தந்தை தாசில்தார் அலுவலக கருவூலத்தில் வேலை பார்க்கிறார்.
தாய் தனியார் தையலகத்தில் பணிப்புரிகிறார்.உத்ராவிற்கு அவள் அப்பாவின் ஜாடை அம்மாவின் குணம். எதிலும் ஒழுங்கு முறை இருக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். செய்வன திருந்த செய்யும் குணம். நீண்ட கரிய குழல். நேர்த்தியான உடை நடை, கூர்மையான கண்கள், அளவு எடுத்த மூக்கு அதை கண்ணு வைக்க கூடாது என்று திருஷ்டி பொட்டு போன்ற மூக்குத்தி. தெளிவான பேச்சு. இது போதும் அவளைப்பற்றி சொல்ல!!
ESTÁS LEYENDO
நீ வருவாய் என!
De Todoஅதே போல் அன்றும் அவன் நின்றிருந்தான். அவள் எதிர்பார்த்தது போலவே, அங்கு அவள் மட்டும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கவில்லை, சுற்றியுள்ள பெண்கள் கூட்டமும் தான். அவனுக்கும் தெரியும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று. அதனை கண்டுக்கொள்ளாதவன் போல கண்ணாடி...