உழவும் வராக அவதாரமும்

16 2 1
                                    

முகநூலில் நண்பர் ஒருவர் பதிவை படிக்க நேர்ந்தது. அவரின் கேள்விக்கான விளக்கமாக இப்பதிவை இடுகிறேன். தங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

..............................
தோழரின் பதிவு

தீபாவளி குறித்து பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.
அது என்னென்ன கேள்விகள்?
எந்த அறிவுள்ள மனிதனாச்சும் பதில் சொல்ல முன்வருவானா?
----------------------------------------------------------------------------
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் (இரணியன்) உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

🎉 You've finished reading உழவுத் தொழிலின் வரலாறும் வராக அவதாரமும்... 🎉
உழவுத் தொழிலின் வரலாறும் வராக அவதாரமும்... Where stories live. Discover now