அது ஒரு அழகான காலைவேளை... சூரியதேவன் தன் கதிர்களை மனிதர்கள் மீது அன்பாய் தூவிக் கொண்டிருக்க.... சூரியனை கண்ட மலர்கள் மலர்ந்து சிரிக்க.... அதை கண்ட வண்டுகள் மலர்களை சுற்றி வந்து ரிங்காரமிட... பலர் அந்த பார்க்கில் ஒட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தனர்... முதியவர்கள் யோகாசனத்தில் அமர்ந்திருக்க.... இளைஞர்கள் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்த நேரம் அந்த பூங்காவை தாண்டி பின்க் நிற சுடியில்... தன் கைப்பையை சரியாய் மாட்டிக் கொண்டு அவசர அவசரமாக பேருந்தில் ஏறினாள் அவள்... நந்தித்தா...
ஒரு சீட்டில் அமர்ந்தவள் பயணச்சீட்டை வாங்கிவிட்டு... தன் கைப்பையில் அனைத்தும் இருக்கிறதா என சரி பார்த்தாள்... அனைத்தும் இருக்கிறதென நிம்மதி அடைந்தவளுக்கு மாரடைப்பு வரும் விதமாய் அவளுக்கு தேவையான ஒன்று அங்கு காணாமல் போயிருந்தது... அதை கண்டு அதிர்ந்தவள் கை பையை பொரட்ட தொடங்கினாள்.... அவள் இறங்கும் நிருத்தமும் வந்து விட... இறுதி வரை அவள் தேடியது கிடைக்கவில்லை... சரியென அவளின் கல்லூரிக்கு நடையை கட்டினாள்... கல்லூரிக்குள் நுழைந்தவளுக்கு உள்ளூர உதறல் எடுத்துக் கொண்டே இருக்க... மனதுள்ளே புலம்ப தொடங்கினாள்...
" எப்படி மறந்தேன்... அது இல்லாம விவரிக்க முடியாதே... சும்மா சொன்னா யாரு ஏத்துப்பாங்க... ஆதாரம் காட்டனுமே... இந்த தலைப்ப இந்த மொத்த கல்லூரிலையுமே நா மட்டும் தான் எடுத்துர்க்கேன்... அது எனக்கே நல்லா தெரியும்... இப்போ நா என்ன பன்னுவேன்... " என பரிதவித்து கொண்டிருந்தவளுள் ஒரு குரல் ஒலித்தது...
" நந்து... நாம வாழ்கைல பார்த்திராத கஷ்டம் இல்ல... நா உன்ன வளத்ததால நீ கேட்டிராத வார்த்தை இல்ல... எத்தனையோ தடைகள் இருந்தும் அத தகர்த்தெரிஞ்சு நீ இப்போ இவ்ளோ பெரிய இடத்துல படிக்கிர... அங்கையும் நீ ஏச்சு பேச்சு வாங்கிகிட்டு தா இருக்க... ஆனா அத நீ எடுத்துக்குட்டதில்ல.... இந்த தலைப்ப நீ விவரிக்கிறதுக்கு ஆதாரம் தேவை இல்லை... ஏனா... அதுக்கு ஆதாரமே நீ தான்... உன் வளர்ச்சி தான்... உனக்கு யார் யார் இந்த நிலமைல இருந்தும் முன்னேரி வந்துர்க்காங்கன்னு நல்லாவே தெரியும்... அவங்கள சக மனுஷகளா பாக்காம... ஒரு உயிரினமா கூட மதிக்காம இருக்க இந்த உலகத்துக்கு... உன் வார்த்தைகள் புத்திய தூசி தட்டி எடுக்கட்டும்... தைரியமா போ... " என நம்பிக்கையூட்ட....
YOU ARE READING
ம(ந)ங்கையும் மனித இனமே... ✔
Short Storyஹாய் இதயங்களே.... இது எனது இரண்டாவது சிறு கதை... ப்ரத்திலிப்பி கான்ட்டஸ்ட்க்கு... இன்னைக்கு தா எழுதுனேன்... சமர்ப்பிச்சிட்டேன்... உங்களுக்கும் காட்டனும் னு தோனுச்சு... அதான் .... படிச்சு பாருங்க... உங்களுக்கு டௌட் வந்துருக்கும்... இரெண்டாவது கதை னா...