இது என்னுடைய முதல் கதை.
ஹீரோயின் வியனி, கமழி, நிகழினி, நனியிதழ்
ஹீரோ விதுஷ்ணன், யாழேந்தி, நிகுலன், மித்திரேயன்
இப்போ வாங்க என்ன கதைனு பாக்கலாம். ஏனா எனக்கே கதை என்னனு தெரியாது பா.....🙄😆 இப்போ தான் யோசிக்கிறேன்....🤔🤔🤔
அழகிய இளங்காலை பொழுது இயற்கையின் அழகிய இசை போல தென்றல் மெல்லிய காற்றை வீசி கொண்டிருந்தது.கோவை நகரத்திலுள்ளஅழகிய கிராமம் தான் யாழ்புரம் (கற்பனை ஊர்). கிராமத்தின் மத்தியில் உள்ள ஒரு அழகிய வீட்டின் வாயிலில் அழகான பூச்செடிகள் ஒரு புறமும் இயற்கையாகவளர்ந்த மரங்களும் அதன் குளுமையும் அதனுடன் செயற்கையாகஉருவாகிய நீரூற்று அந்த காலை நேரத்து அழகுக்கு அழகு சேர்த்தது. அவ்வீடு பழமையான பாரம்பரியமும் மாறாது நவீனமயமாகவூம் வடிவமைக்கபட்டுள்ளது. வீட்டின் உள்ளே நடுவில் முற்றம் அமைக்க பெற்று அதன் வலபக்கத்தில் சமயலறையும் அடுத்த சுவாமி அறையும் உள்ளது. இடபக்கத்தில் ஒரு அறையும் மாடிக்கு செல்வதற்கான படிகட்டுகளும் அமைந்துள்ளது. (வீடு, செடி கொடினு புகழந்து போதும் அடுத்தது என்னனு சொல்லு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
மாடியில் வலதுபுறம் மூன்று அறைகளும் இடதுபுறம் மூன்று அறைகளும் உள்ளது. அதற்கு அடுத்த மாடியில் இன்னும் நான்கு அறைகள் உள்ளது. அதில் இரு அறைகளிலிருந்து நமது (நாயகன்கள்) விதுஷ்ணன், யாழேந்தி சிறு புன்னகையுடன் துயில் கலைந்தார்கள். விதுஷ்ணன் ஆறடி இளைஞன் மாநிறம் கட்டுகோப்பான உடல் பார்போரை திரும்பி பார்க்க தூண்டும் கலையான முகம். தன்னுடைய ஒரே பார்வையில் அனைவரையும் தள்ளி நிறுத்துவான்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.