ரகசியம் 3

195 11 11
                                    

     அனைவரும் மலையின் அடிவாரத்தை அடைந்தனர். அதன் அருகில் சிவாலயம் அழகாக வீற்றிருந்தது. அனைவரும் சென்று சிவனை வழிபட்டனர் அப்போது அவர்களுக்குள் சில காட்சிகள் தெளிவில்லாமல் தோன்றியது. அதில் ஏற்கனவே இவர்கள் இங்கு வந்தது போலவும் தங்களுக்கும் இந்த சிவனுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்பதை உணர்ந்தனர். அந்த ஆலயத்தில் உள்ள லிங்கமானது ஸ்படிகத்தால் ஆன சுயம்பு லிங்கம்.

ஸ்படிக லிங்கம்  (சிறு தகவல்)
சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன.அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில்  வைத்து மதிக்கப்படுகிறது. ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. 

 ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

 ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன்  மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின்  சில பகுதிகளிலும் கிடைக்கும். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் ஆகர்ஷண  சக்தி படைத்ததாக மாறுகிறது.

ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)Where stories live. Discover now