யாழ்புரத்தவர்களின் வீரம்
கட்டுண்டு தன் செயலில்
வெற்றி ஈட்டா மாயவள்.....
கரம் கிழித்து குறுதி
வாக்களித்தால் அந்த
தேவனுக்கு.... பிறவி
பயனை அறியாது
விரோதத்தை மறந்தவர்களை
காவளித்து மோட்சம்
வாங்க பெறுவேன்....
நினைவிழந்தாலும்
பிறவி பயனை அறிந்து
மாயமவளின் சதியால்
இன்னுயிர் நீத்த தம்
முன்னோர்களுக்காய்
ஞானக்கண் தீரவீரா
மாவீரர்களே.....இதனைக் கேட்டு அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு அதில் கூறப்பட்ட செய்தி முழுதாக புரியவில்லை இருந்தாலும் இதிலுள்ள வரிகள் தங்களுக்கு ஏதோ ஒன்றை கூறவருவதாகவே தோன்றியது. அது என்னவென்று யோசித்து கொண்டிருந்தனர் அப்போது தான் நேரத்தைக் கண்டனர் நேரம் இரவு எட்டு. கீழே இருந்து உணவு உண்ண அழைத்ததால் அனைவரும் தங்கள் அறைக்கு சென்று ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.
எப்போதும் அவர்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் இருந்தால் ஒன்றாகவே அமர்ந்து உணவை உட்கொள்ளுவர் அங்கே எப்போதும் சிரிப்பு கேலி கிண்டல் செய்துகொண்டு ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும் உண்ணுவர். இன்றும் அதே போல் அனைவரும் கதை அளந்தபடிய உண்டு முடித்தனர். பெரியவர்கள் அனைவரும் அவர்அவர் அறைகளுக்குச் சென்றனர். சிறியவர்கள் எல்லாம் மாடியில் நடு கூடத்தில் நின்று நாளை அனைவரும் அந்த மலைக்குச் சென்று அந்த சுவடியின் வரிகளுக்கான விடையை தேடலாம் என்று பேசி கொண்டு அவர்அவர் அறைக்கு சென்று உறக்கத்தில் ஆழ்ந்தனர். நாளை அவர்களுக்கு நிறைய ஆச்சரியங்களும் அதிசயங்களும் காத்திருக்கிறது.
அனைவரும் காலையில் தங்கள் அனைத்து வேலையையும் முடித்துக் கொண்டு வீட்டில் அனைவரிடமும் சொல்லி விட்டு நம் நாயகன், நாயகி எல்லாம் மலையை நோக்கி சென்றனர். அங்கு அதே குகைக்குள் சென்று அந்த சுரங்க பாதைக்குள் சென்றனர்.
YOU ARE READING
ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)
Fantasyஇது என்னுடைய முதல் கதை. ஹீரோயின் வியனி, கமழி, நிகழினி, நனியிதழ் ஹீரோ விதுஷ்ணன், யாழேந்தி, நிகுலன், மித்திரேயன் இப்போ வாங்க என்ன கதைனு பாக்கலாம். ஏனா எனக்கே கதை என்னனு தெரியாது பா.....🙄😆 இப்போ தான் யோசிக்கிறேன்....🤔🤔🤔