"என்னடா இது காலங்காத்தலயே கலவரமா இவங்களுக்கு இதே வேலையா போச்சு.." என கூறிக்கொண்டே தன் படுக்கையை விட்டு எழுந்தவன் வழக்கம் போல தனது காலைக் கடனை முடித்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தான்.... ரூமிலிருந்து வந்த தன் மகன் ஆகாஷைக் கண்ட கவிதா காபி எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்,அதை வாங்கியவனிடம் "என்னடா இன்னைக்கி இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்ட" என்றாள்...
"ஹ்ம்ம் அதான் நீங்க ரெண்டு பேரு உங்க கலவரத்தை ஆரம்பிச்சிடீங்கலே. இன்னைக்கி என்ன பிரச்சனை" என்று கேட்டுக்கொண்டே காபியை குடித்தான்.
"அத போய் உங்க அப்பாக்கிட்ட கேளு" என்றாள் கவிதா..
"அப்பா என்னமா பன்னார்" எனக் கேட்ட தன் மகனிடம் "அதை ஏன்டா கேக்குற உங்க அப்பா ஒரு பொதுசேவகர்.." என கவி ஆரம்பிக்க
"அதுதான் நமக்கு தெரியுமே நீ மேலே சொல்லுமா.."
"நேத்து ஏதோ பிரச்சனைனு சொல்லிட்டு வெளிய போனவரு நைட் லேட் ஹ தான் வந்தாரு..!! சாப்புடுரிங்களானு கேட்டேன் வேணாம்னு சொல்லிட்டார்..! நான் வேற தூக்கத்துல அவரை கவணிக்கல காலைல பாத்தா கைல அடிபட்டு கட்டுபோட்டு இருக்காரு"😢😢😢 என்றாள் விசும்பிகொண்டே.
"என்னமா சொல்றீங்க..!! அடிபட்டுறுகா இப்போ அப்பா எங்க??""வெளியதான் இருக்காரு போய் பாரு" என கவிதா கூற கூற எழுந்து சென்றவன் ஹாலில் இருந்தே |அப்பா அப்பா" என கத்திக்கொண்டே போனான் ஆகாஷ்...
"ஏன்டா கத்தற பொறுமையா வா.." என கூறியவரின் அருகில் அமர்ந்தவன் கண்களில் பதட்டத்துடன்"அப்பா என்ன ஆச்சி, எங்க அடிபட்டுருக்கு..."
மெல்ல சிரித்தவர் அவனின் தலையை தடவியபடியே "ஒன்னுமில்லடா சின்ன அடிதான்...""என்னப்பா இப்படி அடி பட்டு இருக்கு.. ஒன்னும் இல்லைன்னு சொல்கிறீங்க.. நீங்க எல்லா விசயத்துலயும் கவனமா இருபிங்களே.. அப்புறம் எப்படிப்பா பார்த்து இருக்க கூடாதா.." என கேட்டவனின் அருகில் வந்த கவிதா
"முதல்ல இந்த பொது சேவையை நிறுத்த சொல்ல...எனக் கூறிய தன் தாயிடம்
YOU ARE READING
வீட்டில் பாடம்
Short Storyஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க 😃🤗🤗 நான் இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருகேன் 🙄🙄. என்னோட பதிவு எப்படி இருக்கும்னு தெரியல😕😕என்னோட முயற்சிக்கு எல்லாரும் சப்போர்ட் பன்னுங்க✌️✌️✌️.