அவர்கள் அனைவரும் குருவை சந்திக்க அங்குள்ள ஒரு குடிலை நோக்கி சென்றனர். இயற்கையின் மொத்த அழகையும் தன்னகதே கொண்டு அவர்களை வரவேற்றது அந்த குடில். அதன் முன்பு அழகிய இளம் ஊதா நிற குளமும் அந்த குடிலிற்கு இன்னும் அழகு சேர்த்தது. அங்கே அவர்களின் குரு பூஜையில் இருப்பதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு இவர்களிடம் கூறிவிட்டு அவரின் சீடன் உள்ளே சென்றுவிட்டார். இவர்களும் காத்திருப்பதாக கூறினர்.
நிகுல் மிகுந்த ஆர்வத்தோடு "அரசே உங்களுடைய இந்த மாய உலகை பற்றி கொஞ்சம் விளக்கி கூறங்கள்" என்றான். அதியனும் தங்களுடைய மாய உலகம் பற்றி கூற தொடங்கினார்.
எங்கள் உலகம் முழுவதும் மாயங்களும் மந்திரங்களும் நிறைந்தது. இங்கு சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் விதவிதமான விசித்திரமான மரங்கள், ராட்சத பூக்கள், ஜெல்லி ஃபிஷ் போன்ற செடி, அழகிய விதவிதமான குட்டியும் பெரிதுமான ருசியான பழ செடிகள், அழகிய நீர் வீழ்ச்சியும் அதன் கீழே குகை போன்ற அமைப்பும் அதில் சலசலக்கும் நீரும் அந்நீரினில் வாழும் விசித்திரமான உயிரினங்கள், விநோதமான பறவைகளும், விலங்குகளும், அதனுடன் சேர்ந்து இயற்கையே இங்கு கண்ணை பறிக்கும் அழகுடன் திகழ்கிறது. இங்குள்ள மக்களும் அனைத்து உயிரினங்களுக்கு எப்போதுமே உற்ற நண்பர்களாகவே இருந்தும் வருகின்றனர். இங்கு அனைவரும் ஒன்றே யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் மாய, மந்திர சக்திகள் கொண்டவர்களே. எங்கு நல்ல சக்திகள் உள்ளதோ அங்கே தீய சக்திகள் இருப்பது வழமைதானே. அப்படி தீய சக்திகளின் ஒருவன் தான் மாயோன் அவன் தான் இங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம். அவனால் ஏற்படும் இன்னல்களிலிருந்து எங்கள் குருவே எங்களை காத்து வழி நடத்தி செல்வார். இங்கு எப்போதுமே ஏதாவது அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கும்.

VOUS LISEZ
ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)
Fantasyஇது என்னுடைய முதல் கதை. ஹீரோயின் வியனி, கமழி, நிகழினி, நனியிதழ் ஹீரோ விதுஷ்ணன், யாழேந்தி, நிகுலன், மித்திரேயன் இப்போ வாங்க என்ன கதைனு பாக்கலாம். ஏனா எனக்கே கதை என்னனு தெரியாது பா.....🙄😆 இப்போ தான் யோசிக்கிறேன்....🤔🤔🤔