அந்த அதிகாலை வேளை மிகவும் இரம்மியமாக அழகிய இளம் தென்றலோடு மெல்லிய மழைச் சாரலோடு அந்த பொழுது இனிமையாக புலர்ந்தது. இதை அறியாமல் நாயகிகள் நால்வரும் மாறி மாறி அவர்கள் கால் மேல் கால் போட்டு அழகாக குழந்தைப் போல் உறங்கிக் கொண்டிருந்தனர். நாயகர்கள் விழித்தெழுந்து தங்கள் நாயகிகள் தூங்கிக் கொண்டிருந்த அழகை கண்ணிமைக்காமல் இரசித்தனர். அவர்களின் குறுகுறுப் பார்வையில் விழி மலர்ந்த நாயகிகள் தன்னவன்களின் விழி வீச்சில் முகம் சிவந்து எழுந்து தங்கள் அறைக்குள் ஓடிவிட்டனர். நாயகர்களும் நாயகிகளின் சிவந்த முகத்தினை கண்டு தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டே தங்கள் காலை பயிற்சிகளை தொடர்ந்தனர்.
தங்கள் பயிற்சிகளை முடித்து குளித்து விட்டு அனைவரும் கீழே சென்றனர். அங்கு ஏற்கனவே வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் உணவு மேஜையில் கூடி இருந்தனர். இவர்களும் அங்குச் சென்றதும் அனைவரும் சேர்ந்து காலை உணவினை கேலி கிண்டலுடன் உண்டு முடித்தனர். உணவு முடித்து பெரியவர்கள் ஒருபுறம் கதையளக்க ஆரம்பித்தனர்.
மழையின் காரணமாக நமது நாயகர், நாயகியர் எல்லாம் தாங்கள் வந்த அன்றே எல்லாரும் திட்டம் போட்டு உருவாக்கிய மாடியிலுள்ள அந்த கண்ணாடி அறைக்குச் சென்றனர். அந்த கண்ணாடி அறை முழுவதும் அழகாக நேர்த்தியாக வடிவமைக்க பட்டிருந்தது, அதில் அவர்களுக்கு அமர்ந்து இயற்கையை ரசிக்க ஏற்றவாறு அங்கு சோப்பாக்கள் போடப்பட்டிருந்தது.
KAMU SEDANG MEMBACA
ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)
Fantasiஇது என்னுடைய முதல் கதை. ஹீரோயின் வியனி, கமழி, நிகழினி, நனியிதழ் ஹீரோ விதுஷ்ணன், யாழேந்தி, நிகுலன், மித்திரேயன் இப்போ வாங்க என்ன கதைனு பாக்கலாம். ஏனா எனக்கே கதை என்னனு தெரியாது பா.....🙄😆 இப்போ தான் யோசிக்கிறேன்....🤔🤔🤔