மீண்டும் அவன்

166 8 0
                                    

மனம் முழுதும் சோகத்தோடும் விழி நிறைய கண்ணீரோடும் ஏது செய்வதென்று தெரியாமல் விக்ரமின் நினைவுகளை தேடச் சென்றாள் சுமித்ரா. என்றும் மறவா காதல் சின்னம் , பல்கலைக்கழக ஆலமரத்தடி தான்.. தற்போதும் அவளது பயணம் அந்த ஆலமரத்தடிக்கே. 
முதல் நாள் சுமித்ரா, விக்ரமை காணச் சென்ற வழியில் அன்றும் அவள் நடந்து சென்றாள். முதல் நாள் வீசிய தென்றல், உதிர்ந்து விழும் இலைகள், இசை பாடும் குயில்கள் அவள் வருகைக்காக காத்திருந்தது போலும்.. அன்றும் அவை அவளை இனிதே வரவேற்றது. ஆலமரத்தடியில் தனக்காக ஓர் ஜீவன் காத்திருப்பதாக எண்ணி அவளது பாதங்கள் எதிர்பார்ப்பு என்னும் கனத்தை சுமந்து சென்றது. அவளது பார்வை சிறிதும் நகராது மரத்தண்டின் மீதே விழுந்திருந்தது. ஆலம்நிழலின் அரவணைப்பில் ஆனதும் அவளது கை, தண்டினை வருடிய படி " உனக்காச்சும் தெரியுமா என் விகி எங்கிருக்கான்னு.. அவன் உனக்கிட்டயாலும் ஏதாச்சும் சொன்னானா.. " என கேட்டு விம்மிய படி அமர்ந்து கொண்டாள்.
வீசிக் கொண்டிருந்த மந்த மாருதம் சற்று வேகமாக வீசியது. அது அவள் முகத்தை நனைத்துக் கொண்டிருந்த கண்ணீரையும் துடைத்துச் சென்றது. அதே தென்றல் அவளது காதில் ஓர் செய்தி கொண்டு சேர்த்தது. ஓர் ஆடவன் " சுமி.. " என்று அழைத்த ஓர் குரலே அந்த செய்தி. மரு கனமே மூடியிருந்த கண்களை திறந்து, திடுக்கிட்டவளாய் " விக்ரம் " என்றாள் . ஆம்.. தென்றல் கொண்டு சேர்த்தது விக்ரமின் குரலைத்தான். உடனே எழுந்து நின்று விக்ரமை தேடினாள் சுமி. முன் குரல் வந்த திசையில் இருந்து மீண்டும் " நான் தான்.. உன் அதே விக்ரம்.. " என்ற குரல் சுமியின் காதோரம் தஞ்சம் புகுந்தது. அவ்வளவு தான், சுமித்ராவின் கண்கள் அகல விரிந்தது, மூச்சு தடைப்பட்டது. வழியும் விழி நீரும் கண்களுக்குல் சிறைப்பட்டது. அழைப்பு வந்த திசைப்பக்கமாக அவளது சிரசு திரும்பியது.
முதல் நாள் சந்தித்த போது அணிந்திருந்த அதே ஆடையுடனும் பல்கலைக்கழக மாணவனாய் அழகிய புன்னகையுடனும் சுமித்ராவை பார்த்து நின்றுகொண்டிருந்தான் விக்ரம். சுமித்ராவின் தடைப்பட்டிருந்த மூச்சு வழமைக்கு மாறாக மிக வேகமாக அடித்தது. வியர்வையோ விழியோரம் வடிந்தது. " விக்ரம் " என மெல்லிய குரலில் மீண்டும் அழைத்தாள். சிரித்து விட்டு " ஆ... நான் தான் லூசு.. " என்றான் அதே குறும்புடன் . சிறைப்பட்ட கண்ணீரும், தேக்கி வைத்த ஏக்கமும் பொங்கும் பூம்புனலாய் பாய்ந்திட கட்டியனைத்தாள் விழிப் புனல் வடிய.
ஆனால்... அவளது கைகளுக்குள் எஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்.

மந்த மாருதம்  பாகம் 2 ( முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora