சுமித்ரா நடந்தவற்றை எண்ணியபடி ஆலம் மரத்தடியில் பல மணித்தியாலங்கள் சாய்ந்திருந்தாள். நெடுநேரமாக வீடு திரும்பாததன் காரணமாக ஆதியும் சிவாவும் தனித்தனியாக சுமித்ராவை தேட ஆரம்பித்தனர். மாலை நான்கரை மணி அளவில் சிவா ஆலமரத்தடிக்கு வந்தடைந்தான். சுமியோ ஆலம்நிழலில் குழந்தை போல் உறங்கியிருந்தாள். சிவா அவளின் நிலையை எண்ணி சிரிப்பதா அழுவதா திட்டுவதா என்று புரியாமல் அவளிற்கருகில் போய் அமர்ந்து கொண்டான். பின் ஆதியிற்கு தொலைபேசியில் அழைத்து சுமித்ரா இருக்கும் இடத்தில் இருப்பதாக கூறி விட்டு சுமித்ராவை விழிக்கச்செய்தான்.
சுமி : அண்ணா... நீங்க எப்டி இங்க...
சிவா : உங்க ரெண்டு பேர பற்றியும் என்ன விட யாருக்கும் தெரியாது.. எப்ப மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் இங்க தான் வர்வீங்கன்னு தெரியும்..
சுமி : அண்ணா.. உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.. பட் ஐ டோன் நோ ஹவ் ட்டு சே..
சிவா : அண்ணான்னு தானே சொல்ற.. அது தான்.. மச்சீ ன்னு சொல்லு.. கண்ணாபின்னான்னு வார்த்த வரும்...
என்று கூறியதும் சிரிப்பெனும் கொழுசுச் சத்தம் மெல்லியதாக கேட்டது.. நீண்ட காலத்திற்கு பின் முதல் முறையாக அவள் சிரித்ததை தன் முதல் பெண் குழந்தையின் முதல் சிரிப்பை தந்தை ரசிப்பதை போல் ரசித்தான் சிவா.சிவா : நீ மூன்று வருஷமும் ஒரு நாளிற்கும் பின் இன்றைக்கு தான் சிரிக்கிற.. ஒரு பெண்ட அலங்காரமே சிரிப்புத்தான்.. அத வீணா மறச்சிட்டு உன்ன நீயே வருத்திக்குர.. விக்ரம் இனிமே வரப்போரது இல்ல.. அடுத்து என்ன பண்ராண்னு தின்க் பண்ணு...
YOU ARE READING
மந்த மாருதம் பாகம் 2 ( முடிவுற்றது )
Romanceநம்ம வாழ்க்கைய நாம தான் தீர்மானிக்கனும் அதிகமானோர் சொல்வாங்க. அட நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா நம்ம மேல உயிரே வெச்சவங்க நினைச்சா நாம எதிர்ப்பார்த்தத விட நல்ல வாழ்க்கைய நமக்கு பெற்றுத்தறுவாங்க. அது காதலன் / காதலின்னு நீங்க நினைப்பீங்க... ஆனா...