ரகசியம் 9

58 3 3
                                    

அனைவரும் அவரவர் அறைக்கு சிறிது ஓய்வு எடுக்க சென்றனர். சிறிது நேரத்தில் நான்கு அறையிலிருந்தும் பயங்கர அலறல்கள் அனைவரின் காதுகளிலும் எதிரொலித்தது. அங்க என்ன ஆச்சுனு நம்ம தாத்தாஸ் அவங்கிட்ட சொல்லட்டும் நான் உங்களுக்கு சொல்றேன்.

அந்த மொத்த இடமும் சுழல் காற்றிலும் அந்த மதிய வேளையிலும் கரிய இருள் சூழ்ந்து ஒன்றுமே கண்களுக்கு அகப்படாமல் கருமை சூழ்ந்து காணப்பட்டது. அங்கோ மெல்லினியால் அனுப்பட்ட தீய ஆத்மாக்கள் அனைவரையும் நொடிப் பொழுதில் கொன்று தங்கள் கட்டளையை நிறைவேற்ற வேகமாக அவர்களை நெருங்கிய நொடி ஏதோ ஒரு சக்தியினால் தூக்கி எறியபட்டது.

அப்போதே அதன் கண்களில் பட்டது அவர்களின் கழுத்தில் இருந்த கயிறு அதனை கண்டதும் தங்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து வேறு என்ன செய்வது என்று யோசித்து அனைவரையும் விழிக்க வைத்து அவர்கள் முன் மாய தோற்றங்களை உருவாக்கியது அதன் விளைவாக அந்...

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.

அப்போதே அதன் கண்களில் பட்டது அவர்களின் கழுத்தில் இருந்த கயிறு அதனை கண்டதும் தங்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து வேறு என்ன செய்வது என்று யோசித்து அனைவரையும் விழிக்க வைத்து அவர்கள் முன் மாய தோற்றங்களை உருவாக்கியது அதன் விளைவாக அந்த இடமே இருளில் சூழ்ந்து ஒரு உருவத்தின் வெள்ளை நிற கண்களை மட்டுமே கண்டனர் அந்த உருவமோ அவர்கள் அனைவரையும் அந்தரத்தில் மிதக்க வைப்பது போல் மாயையை உருவாக்கி அவர்களை அலற செய்தது. இதனை கண்ட சித்தர் சட்டென்று தோன்றி அந்த மாயையிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அந்த உருவத்தினை அவருடைய சக்தியினால் அழித்து அதனை அவர்களின் நினைவுகளிலிருந்து அழித்து நித்திரையில் ஆழ்த்தினார்.
பிறகு தாத்தாக்களிடம் திரும்பி இவர்களுக்கு இப்போது நடந்த எதுவும் நினைவில் இருக்காது அதே போல் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது அனைத்தும் நன்றாகவே நடக்கும் கவலை வேண்டாம் என்று கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டார்.

Yayımlanan bölümlerin sonuna geldiniz.

⏰ Son güncelleme: Jul 05, 2024 ⏰

Yeni bölümlerden haberdar olmak için bu hikayeyi Kütüphanenize ekleyin!

ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin